எம்.ஜி.ஆருடன் வேலனின் நட்பு
m.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது