-
19th September 2013, 07:55 AM
#11
Senior Member
Seasoned Hubber
பெற்ற மனம் சிறப்புச் செய்திகள்
1. இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பவர்

திரு கே.வி.சீனிவாசன்.
ரங்காராவ் அவர்கள் தன் ஒரிஜினல் குரலிலேயே தமிழை நன்றாகப் பேசக் கூடியவர். என்றாலும் என்ன காரணத்தாலோ இப்படத்தில் அவருக்கு இரவல் குரல் பயன் படுத்தப் பட்டது.
திரு கே.வி.சீனிவாசன் அவர்கள் மனோகரா நாடகத்தில் நடிகர் திலகம், பத்மாவதியாக நடித்த போது மனோகரனாக நடித்தவர்.
2. பாரதிதாசன் பாடலை சந்திரபாபு இப்படத்தில் மட்டுமே பாடியுள்ளதாகத் தெரிகிறது. வேறெந்தப் படத்திலேனும் அவர் பாரதிதாசன் பாடல்களைப் பாடியுள்ளாரா என்பதை தெரிந்த நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
3. இப்படத்தில் இடம் பெற்றுள்ள டி.எம்.எஸ். பாடல் இது வரை வெளியே அதிகம் ஒலித்ததாகத் தெரியவில்லை. மிகவும் அருமையான பாடல்.
Last edited by RAGHAVENDRA; 19th September 2013 at 08:01 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th September 2013 07:55 AM
# ADS
Circuit advertisement
Bookmarks