-
18th October 2013, 11:47 AM
#11
Junior Member
Regular Hubber
கமல் ஹாஸனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார் மராட்டிய முதல்வர்!
மும்பை: சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல் ஹாஸனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்தார் மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவுகான். 15வது மும்பை சர்வதேச திரைப்பட விழா நேற்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட கலைஞர்கள் பலரும் வந்திருந்தனர். மும்பை திரைப்பட கழகமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் தலைவராக இயக்குநர் ஷியாம் பெனகல் நியமிக்கப்பட்டுள்ளார். துவக்க நாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை சோனாக்ஷி சின்ஹா பங்கேற்றார்.
இந்த விழாவில் இரு சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஒருவர் பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர் கோஸ்டா கவ்ராஸ். ஆமென், இஸட், மிஸ்ஸிங், லெ கேபிடல் போன்ற புகழ்பெற்ற அரசியல் படங்களின் எழுத்தாளர் -இயக்குநர் கவ்ராஸ். கவ்ராஸுக்கு இந்த விருதினை மராட்டிய முதல்வர் வழங்கியபோது மொத்த ஆடிட்டோரியமும் எழுந்து நின்று கைத்தட்டியது.
கமலுக்கு... வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அடுத்த கலைஞர் நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் கமல்ஹாஸன். மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவுஹானிடம் விருதினைப் பெற்றுக் கொண்ட கமல் பேசுகையில், "நான் இந்த விழாவில் பேசுவதற்காக எதையும் முன்தயாரிப்பு செய்யவில்லை. அப்படி செய்தாலும் இங்கே அது கைகொடுக்காது என எனக்குத் தெரியும். ஷ்யாம் பெனகல், கவ்ராஸ், பாலச்சந்தர் போன்றவர்களின் படங்கள் தந்த பாதிப்புதான் என் சினிமா என்றால் மிகையல்ல. என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இது போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் முக்கியமான களங்கள்," என்றார்.
-
18th October 2013 11:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks