-
19th October 2013, 11:52 AM
#11
Junior Member
Devoted Hubber
பாலச்சந்தருக்கு கமல் கொடுத்த விருது!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என திரையுலகில் பன்முகம் கொண்டு விளங்கும் கமல்ஹாசனுக்கு ச்மீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட கமல்ஹாசன் “ பாலச்சந்தர் அவர்கள் என்னை கண்டுபிடித்ததாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பாலச்சந்தர் தான் என்னை உருவாக்கினார். பாலச்சந்தரைப் போல வழிகாட்டி இருந்ததால் தான் என்னால் இந்த அளவுக்கு வெற்றிகளைப் பெறமுடிந்தது. எனவே இந்த விருதை நான் பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
முதலிலெல்லாம் என் நடிப்புக்கென தனிச்சிறப்பு எதுவுமே இல்லை. எனக்கு கிடைத்த ஆசான்களும், வழிகாட்டிகளும் தான் என்னை உருவாக்கினார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்ற கலைஞர்களுக்கு விருதுகள் கொடுத்து ஊக்குவிக்கும் மும்பை திரைப்பட விழாவிற்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.
-
19th October 2013 11:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks