பாட்டுப் பேச வா - 3
*-****************************
கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..
*
வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…
*
ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்தர மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போது என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..
*
சரி கம்பன் என்ன சொல்கிறார்..
*
ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே
ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..
*
எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்!) என்ன சொல்றான்..
*
உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….
*
உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே.
.
*
சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..
அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..
*
திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
இந்தாள் என்ன சொல்றார்…
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
(காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)
*
இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகப்பாடுது...
கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே.
.
கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர்
*
சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..
*
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர்வழியுதடி கண்ணே
: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
ம்ம் நல்ல பாட்டுதேன்..
*
கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.
*
இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...
*
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
*
நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..
*
காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..
*
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
*
ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..
*
அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.
*
.
மார்கழித் திங்களல்லவா...
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
**
நல்ல சாங் தானில்லை..
**
கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழியே விட்டு
போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு
*
ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..
*
Bookmarks