Quote Originally Posted by Cinemarasigan View Post
இலங்கையில் நடந்த இனப்படுகொலை மிகவும் வருத்தமான, கொடுமையான நிகழ்வு. ஆனால் அது இந்திய அரசால் செய்யப்பட்டது இல்லை. இனப்படுகொலை நடந்த பிறகு இந்தியாவில் இருக்கும் எந்த தமிழனும் இந்திய அரசு வேலையில் சேர மாட்டேன் என்கிறார்களா ? வேலையில் இருக்கும் யாரும்சம்பளம் வாங்காமல் இருக்கிறார்களா? எந்த பண்டிகையும் கொண்டாடாமல் இருக்கிறார்களா? காங்கிரஸ் இல்லாமல் வேறு எந்த கட்சியாவது ஆட்சியில் இருந்து இருந்தாலும் இலங்கை அரசை எதிர்த்து என்ன செய்திருப்பார்கள்?
எல்லா தமிழர்களையும் போல கமலும் அந்த நிகழ்வை எண்ணி வருந்துகிறார், தன்னால் முடிந்த அளவுக்கு சில இடங்களில் அதைப்பற்றி பேசுகிறார். கமல் விருதை வாங்கிக்கொள்வதும் வாங்காமல் இருப்பதும் அவருடைய பெயரை பாதிக்காது.
yes..