Results 1 to 10 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "இன்று போல் என்றும் வாழ்க "
    --------------------------------------------------------------------------------------------------

    வெளியான தேதி :05/05/1977. -38 வது ஆண்டு துவக்கம். (நண்பர் திரு.வினோத் அவர்கள் குறிப்பிட்டதில் சிறு திருத்தம் -35 வது ஆண்டு அல்ல.)

    முதல் நாள் மாலை காட்சியில் நண்பர்களுடன் தேவி பாரடைஸில்
    பார்த்தது பசுமையான அனுபவம்.

    அந்த காட்சியினை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ,அவரது துணைவியார்
    திருமதி. வி.என். ஜானகி , நடிகை ராதா சலூஜா ஆகியோருடன்
    பார்த்தது சிறப்பு தகவல்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் படம் பார்க்க வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் /பக்தர்கள் மிகுந்த எழுச்சியுடனும் , பலத்த ஆரவாரத்தோடும் கண்டு களித்தனர் .

    முதல் பாடலான , இது நாட்டை காக்கும் கை பாடல் ஆரம்பித்தவுடன் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது. உற்சாகமூட்டும் ,அருமையான கொள்கை பாடல்.


    வெல்கம் ஹீரோ காதல் பாடல் படமாக்கம் மிகவும் அருமை.

    இதயத்தில் இருந்தே இதழ்கள் வரை -பாடல் கண்ணுக்கு குளுமை.

    அன்புக்கு நான் அடிமை - ஜேசுதாஸ் பாடிய அருமையான கொள்கை
    மற்றும் தத்துவ பாடல்.

    புதுமை பெண்கள் - பாடல் ரசிக்கும்படி இருந்தது.

    என் யோகா ஜாதகம் - விறுவிறுப்பான ,ஜனரஞ்சகமான பாடல்.

    நடிகர்.விஜயகுமார் புரட்சி தலைவருடன் நடித்த ஒரே படம்.

    நகைச்சுவை நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் காமெடி பிரமாதம்.

    சண்டை காட்சிகள் புதுமை. ரயிலில் சண்டை காட்சிகள் படத்திற்கு
    சுறுசுறுப்பு .

    ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி.

    தேவி பாரடைஸில் 100 நாட்களும் , மகாராணியில் 85 நாட்களும்
    ஓடிய படம்.

    முன்னாள் சபாநாயகர் திரு. காளிமுத்து கதை வசனம் எழுதிய படம்.

    அ. தி.மு.க. கட்சி கொடியை பகிரங்கமாக காட்டிய மற்றுமொரு படம்.

    அ. தி.மு.க. - இ .காங்கிரஸ் கூட்டணிக்காக பாராளுமன்ற தேர்தலுக்கான உழைப்பு இப்படத்தில் புரட்சி தலைவரின் முகத்தில்
    நன்கு காணலாம்.

    இன்று போல் என்றும் வாழ்க படத்தின் புகைப்படங்கள்/செய்திகள் பதிவு செய்த திரு. செல்வகுமார் /செய்திகள் அளித்த திரு. வினோத்
    ஆகியோருக்கு நன்றி.


    ஆர். லோகநாதன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •