-
22nd June 2014, 06:21 AM
#11
Junior Member
Platinum Hubber
இன்று போல் என்றும் வாழ்க - 100வது நாள் விழா 1977.
************************************************** ********************
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் கலந்து கொண்ட முதல் 100 வது நாள் வெற்றி விழா- அவர் நடித்த படத்திற்கே என்பதும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் திலகத்தின் இளமையை புகழ்ந்து தமிழக ஆளுநர் பிரபு தாஸ் பட்வாரி பேசியதும் குறிப்பிடத்தக்கது .
37 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழா - 2014
************************************************** ****************
1965ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த ஆயிரத்தில் ஒருவன் அன்றைய தமிழக சூழ்நிலையில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு 100 வது நாள் விழா நடை பெறவில்லை .இதற்காக பந்துலு அவர்கள் ஒரு விளம்பரமே
தந்தார் .பல வருடங்கள் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இடை வெளி இல்லாமல் கற்பக விருட்சமாக , விநியோகஸ்தர்களுக்கு அமுத சுரபியாக திகழ்ந்த படம் . டிஜிடல் வடிவில் 2014ல் திரைக்கு வந்து சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் கடந்து இன்று ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் விழா நடை பெறுவது மிக பெரிய சாதனை .
மக்கள் திலகத்தின் மறைவிற்கு பின் தூத்துக்குடியில் சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டதும் , சென்னை சரவணா அரங்கில் 15 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டதும் சரித்திர சாதனை .
-
22nd June 2014 06:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks