-
25th July 2014, 04:09 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் வாசு,
கலைநிலா, ஆணழகன் ரவிச்சந்திரனின் நினைவு நாளையொட்டி தங்கள் பதிவுகள் அருமை, எனினும் அனுபவிக்க முடியாத சோகம் தலைநீட்டுகிறது. அவர் நடித்த படங்களின் பெயர்களை வைத்தே நினைவஞ்சலி செலுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
'இன்றைய ஸ்பெஷல்' பகுதியில் நீங்கள் வழங்கியுள்ள குமரிப்பெண் படத்தின் 'ஜாவ்ரே ஜாவ்' பாடல் நன்றாக இருந்தபோதிலும் அதைக் கேட்கும்போதெல்லாம் 'இது டி.எம்.எஸ்.பாடியிருக்க வேண்டிய பாடல்' என்ற எண்ணம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்குக்காரணம் டீசிங் பாடல்களுக்கு ஏற்றவர் பாடகர் திலகம்தான். மேலும், பேசும்போது ஆண்மை நிறைந்த குரலில் பேசும் ரவிக்கு மென்மையான பி.பி.எஸ். குரல் ஸூட் ஆகவில்லைஎன்பது உண்மையே. மென்குரலுடைய ஜெமினி, முத்துராமன், ராஜன் ஆகியோருக்கு ஒக்கே.
ரவியின் மற்ற டீஸிங் (கலாய்ப்பு) பாடல்களைப்பாருங்கள்.
'ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி'
'இரவில் வந்த குருவிகளா அடி குட்டிகளா'
'ஆடு பார்க்கலாம் ஆடு'
'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்'
இதே படத்தில் வந்த 'வருஷத்தைப்பாரு 66'
'ஜாவ்ரே ஜாவ்' பாடலில் குரல் வித்தியாசம் காட்டினாலும், அதைத்தாண்டி கண்ணதாசனின் வரிகளும், ரவியின் உற்சாக நடிப்பும் அதை ஈடு செய்யும்.
பாடலைப்பற்றிய நல்ல ஆய்வு..., பாராட்டுக்கள்.
-
25th July 2014 04:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks