Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உறங்கையிலே பானைகளை
    உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
    உருப்படியாய் இருப்பதையும்
    கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
    இறங்குவோரைக் கொன்று
    இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
    இத்தனையும் மனிதனிடம்
    மொத்தமாய் வாழுதடா !
    பொறக்கும்போது - மனிதன்
    பொறக்கும்போது பொறந்த குணம்
    போகப் போகப் மாறுது - எல்லாம்
    இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது !
    பட்டப்பகல் திருடர்களைப்
    பட்டாடைகள் மறைக்குது - ஒரு
    பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
    திருடனென்றே உதைக்குது !
    காலநிலையெ மறந்து சிலது
    கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
    கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
    வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
    கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது !
    புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
    புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
    போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
    ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை !
    உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
    ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
    உளறி என்ன,கதறி என்ன?
    ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !

  2. Thanks Russellbpw thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •