-
25th September 2014, 07:35 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு,
உலகம் சுற்றும் வாலிபன் புத்தர் கோயில் சண்டைக் காட்சி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்கள் திரு. ரூப் குமார், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை துல்லியமாக நினைவு கூர்ந்து வரிசைப்படுத்தி பட்டியலிட்டு பாராட்டிய திரு. எஸ்.வி.சார், அந்த சண்டைக்காட்சியையே முயற்சி எடுத்து பதிவிட்ட திரு. யுகேஷ்பாபு, பல மொழிகளிலும் நன்றி கூறி பாராட்டு தெரிவித்த திரு.சைலேஷ் பாசு சார் ஆகியோருக்கு நன்றிகள். குறிப்பாக, ஏக் காவ் மே... வசனம் இன்றுபோய் நாளை வா படத்தில் இருப்பது என்பதை குறிப்பால் உணர்த்தியதுடன், முடிந்தால் நாளை வருகிறேன் என்று நான் கூறியதை மனதில் வைத்தும் இரண்டுக்கும் பொருத்தமாக இன்றுபோய் நாளை வா என்று குறிப்பிட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களின் சாமர்த்தியமான வார்த்தையாடலுக்கு பாராட்டுக்கள்.
துன்பத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறைவதும் இன்பத்தை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாவதும் இயல்பு. அந்த வகையில் தலைவர் படம் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முக்கியமாக, இதில் எனது திறமை எதுவுமே இல்லை. தலைவரின் திறமையை நான் கண்ட வரையில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுகூட கடல் நீரை கையில் அள்ளும் முயற்சிதான். காரணம், தலைவர் திறமையான நடிகர் மட்டுமல்ல, திரைப்படத்துறையில் அவருக்கு தெரியாத விஷயம் இல்லை. கேமரா மேன், எடிட்டர், டைரக்டர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு காட்சியிலும் விவரித்தால், உலகம் சுற்றும் வாலிபன் ஆய்வு மட்டுமே ஒரு திரி தேறும். (குறைச்சலாக பார்த்தாலும்) இதுமட்டுமல்லாமல், அரசியல்துறையில் அவர் சந்தித்த சவால்களும் வெற்றிகளும் தனி. தலைவரின் ரசிகர்கள், தொண்டர்கள் என்பதே நமக்கு கிடைத்துள்ள பெரிய கவுரவம்.
ரூப் குமார் சார் கூறியது போல உ.சு.வா. பற்றியே நிறையே எழுத வேண்டும் என்று ஆசை. மற்றதெல்லாம் இருக்கட்டும். துசிதானி ஓட்டலையும் அதன் பிரம்மாண்டத்தையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பிரமிப்பு. அதுவும் 1973ல் அது ஒரு ஓட்டல் என்றால் நம் ஊரில் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் எங்கள் ஊரைப் போன்ற இடங்களில் ஓட்டல் என்றால் அழுக்கேறி ஈக்கள் மொய்க்கும் டேபிள்களும், நசுங்கிப் போன இரும்பு ஸ்டூல்களும்தான் நினைவுக்கு வரும். துசிதானியின் பிரம்மாண்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே அதற்கேற்ற வகையில் தலைவர் காட்சிகளை அமைத்திருப்பார். அதையெல்லாம் விரிவாக நேரம் கிடைக்கும்போது பார்ப்போம். அன்புக்கு நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2014 07:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks