-
20th October 2014, 08:54 PM
#11
Junior Member
Platinum Hubber
தமிழ் பட உலகின் சிகரங்கள் எம்.ஜி.ஆர். , சிவாஜி ஆகியோர் நடிகர் வி.கே ராமசாமியை வி.கே. ஆர். அண்ணன் என்றுதான் அழைத்தார்கள்.
தத்துவ பாடல் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களான நாடோடி மன்னன், அரசிளங்குமரி, திருடாதே போன்ற படங்களுக்கு பாடல்கள்
எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழுக்கு அணி சேர்த்து
பிரபல பாடல் ஆசிரியர் ஆனார்.
தமிழ் பட உலகில் 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி ஆரம்ப காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு தன் கைவண்ணத்தில் எழுதி
எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்த்தார். நல்லவன் வாழ்வான், தெய்வத்தாய், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா நான் ஆணையிட்டால்,அடிமைப்பெண் ,பணம் படைத்தவன், குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு , மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன் , நீரும் நெருப்பும், ஆயிரத்தில் ஒருவன், நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன் , உலகம் சுற்றும் வாலிபன் , உரிமைக்குரல், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் , நாளை நமதே, இதயக்கனி ,
பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன் ,
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
நன்றி : செய்திகள் - மாலை மலர் - தீபாவளி மலர் 2014
-
20th October 2014 08:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks