-
31st October 2014, 06:52 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
KALAIVENTHAN
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞரின் கருத்தை நிரூபித்து வரும் பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு, ரகசிய போலீஸ் 115 படத்தில் 6 சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். திரு. வாலி பாடல்கள் எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், திரு. கண்ணதாசன் மகன் திருமண விழா புகைப்படத்தை வெளியிட்டீருந்தீர்கள். திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியது போல அவர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள். தந்தை கண்ணதாசன் பெயரில் பதிப்பகம் நடத்தி தரமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தலைவர் மீது அபிமானம் கொண்டவர். கடந்த ஜனவரி 17 தலைவரின் பிறந்த நாளன்று அவரது நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
காட்சிகள், புத்தக பதிவுகள் மூலமே தனது கருத்தை விளக்கிவிடும் ஆற்றல் கொண்ட நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு,
ரகசிய போலீஸ் 115 படத்தின் ‘பால்.. தமிழ்ப் பால்’ பாடல் காட்சி வீடியோவை பதிவிட்டதன் மூலம் அந்தப் பாடலை திரு. வாலி எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கீழே உள்ள செய்தி இணையதளத்தில் நான் படித்தது. அந்த இணையதள முகவரியையும் அளித்துள்ளேன். அதை வைத்துத்தான் ரகசிய போலீசில் எல்லா பாடல்களையும் கவியரசர் எழுதியதாக கருதிக் கொண்டிருந்தேன். ‘பால் தமிழ்ப்பால்...’ பாடல் வாலி எழுதியதாக இருந்தால் எனது தவறை சுட்டிக் காட்டியதற்காக நன்றி. இது நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கான விளக்கமாகவும் இருக்கும். நன்றி.
-----------------------------
இணையத்தில் இருக்கும் அந்த தகவல்....
பால்! தமிழ்ப்பால்!
1968 ஆம் ஆண்டில், புரட்சி நடிகர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ‘ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.
ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!
http://www.puratchithalaivar.org/tam...s/kannadhasan/
--------------------
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st October 2014 06:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks