-
10th November 2014, 01:28 AM
#11
Junior Member
Devoted Hubber
படம்: சாமி போட்ட முடிச்சு (1991)
பாடல்: மாதுளம் கனியே
பாடியவர்கள்: ராஜா சார், ஜானகி
எழுதியவர்: கங்கை அமரன்
எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை ஆரம்ப காலம் தொட்டு கேட்டு வந்தாலும், படம் பார்க்காததால் இது ஒரு தாலாட்டு பாடல் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். டூயட் பாடல் என்று சமீபத்தில் தான் தெரிந்தது. முரளியும் சிந்துவும் மறைந்து விட்டார்கள், ஆனால் அவர்கள் வாயசைத்த இந்த பாடலுக்கு மரணம் இல்லை..
பாடல் பதிவு செய்து அன்று ஆர்கஸ்டிரா புல் ஹவுஸ் என்று நினைக்கிறேன், அவ்வளவு வாத்தியங்கள், அள்ளி தெளித்துவிட்டார்.
இந்த பாடலை அழகான ஆழியாறு அணை பகுதிகளில் படம் பிடித்திருக்கிறார்கள். ஊருக்கு போகும்போதெல்லாம் ஆழியாறு மற்றும் வால்பாறைக்கு செல்வதை ஒரு யாத்திரையாகவே செய்து வருகிறேன். எத்தனை பாடல்கள்? இந்த மலைகளும், மலை சார்ந்த இடங்களும் எத்தனை முறை அவருடைய பாடல்களுக்கு தலையாட்டி இருக்கும்? ம்.....
Last edited by rajaramsgi; 10th November 2014 at 01:40 AM.
-
10th November 2014 01:28 AM
# ADS
Circuit advertisement
Bookmarks