-
3rd December 2014, 08:53 PM
#11
Junior Member
Diamond Hubber
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் ரிலீஸாகும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்கள் இப்பொழுதே படத்தை வரவேற்க கட் அவுட் வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் அஜீத் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய கட் அவுட்டை தமிழர்கள் பகுதியில் வைத்துள்ளனர். ஒரு இந்திய நடிகருக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இலங்கையில் வைப்பது இதுதான் முதல் முறை. இந்த கட் அவுட் மிகப்பிரமாண்டமாக 59 அடிகளில் அமைக்கபட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது அவருக்கு 35 அடியில் கட் அவுட் வைத்ததே இலங்கையில் இதுவரை இந்திய நடிகர்களுக்கு வைத்த மிகப்பெரிய கட் அவுட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளதாகவும், விரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளன
courtesy india glitz
-
3rd December 2014 08:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks