-
4th December 2014, 06:57 AM
#11
Junior Member
Diamond Hubber
repeated article but interesting
நினைத்ததை முடிப்பவன் ----
"நினைத்ததை முடிப்பவன் " படத்தில் நடித்த எம் ஜி ஆர் உண்மையில் நினைத்ததை முடிப்பவர் தான் .
டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதல்வரான எம் . ஜி . ஆர் தனது துணைவியார் ஜானகி அம்மாளுடன் டெல்லி சென்றார் . அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர் .
தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த எம் ஜி ஆர் , கூட்டம் தொடங்குவதற்கு முன் பாவலர் முத்துச்சாமியை அழைத்து எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தி இடம் மானியம் கேட்கலாம் என நினைக்கிறேன் , அதற்கு பணம் எவ்வளவு தேவை என கொட்டேஷன் கொடுங்கள் என்றார் .
பாவலரும் கணக்கிட்டு எம் ஜி ஆரிடம் கொடுத்தார் . ஏற்கனவே சத்துணவுத் திட்டத்திற்கு 125 கோடிகள் செலவிட்டு இருக்கிறோம் , மீண்டும் 120 கோடிகள் தேவைப் படும் என்றார் .
கூட்டம் முடிந்து மக்கள் திலகத்தின் எல்லா கோரிக்கைகளையும் கேட்ட பிரதமர் ராஜீவ் , சீருடை வழங்கும் கோரிக்கையை மட்டும் ஏற்கவில்லை , நிராகரித்து விட்டார் , அடுத்த பட்ஜெட்டில் ஆவன செய்கிறேன் என்றார் .
அதற்கு எம் ஜி ஆர் சம்மதிக்கவில்லை , தமிழ் நாட்டிற்கு எந்த மானியமும் வேண்டாம் என சொல்லி கூட்டத்திலிருந்து எழுந்து வந்து விட்டார் .
தமிழ் நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம் ஜி ஆருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆர் . கே திவான் போன் செய்தார் . மாலையில் வேண்டுமானால் உங்களுடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் . அதற்கு எம் ஜி ஆர் சம்மதித்தார் . பிரதமர் சம்மதித்தால் பாப்போம் , இல்லாவிட்டால் வீட்டிற்கு ஒரு ரூபாய் என்று பிரித்து நமது திட்டத்தை நாமே அமல் படுத்துவோம் என்றார் எம் ஜி ஆர் .
அடுத்து பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார் , தான் நினைத்ததை முடித்துவிட்டுத் தான் திரும்பினார் . ஒரு பிடி சோற்றுக்கும் , ஒரு ஜோடி துணிக்கும் என்ன கஷ்டப் பட்டேன்னு எனக்குத் தான் தெரியும் . அதனால் தான் என்னால் முடிந்த அளவுக்கு மதிய உணவோடு இலவச உடையும் கொடுக்கிறேன் என்றார் எம் . ஜி . ஆர் ... அவரை எப்போதும் நினைக்க முடியும் , மறக்க முடியாது ....
இதைச் சொன்னது எஸ் எஸ் ராஜேந்திரன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th December 2014 06:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks