-
12th December 2014, 05:17 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு,
உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன் ஆகிய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் திரு. என். பாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று காலமானதாக இன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல திறமையான ஒளிப்பதிவாளர். உரிமைக்குரலில் குறிப்பாக, தலைவர் காவலுக்கு இருக்கும்போது இரவில் நடக்கும் களத்து மேட்டு சண்டைக் காட்சி, பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட.. பாடலின் போது லதாவை முதுகில் தூக்கி தலைவர் சுற்றும்போது மரத்துக்கு மேலிருந்து டாப் ஆங்கிள் காட்சி (இந்தக் காட்சியில் தலைவரின் இடது கால் செருப்பு கழன்றுவிடும்), கிளைமாக்சில் தீப்பற்றி எரியும் பாலத்தை தலைவர் குதிரை வண்டியில் கடக்கும் காட்சி என்று பட்டியலிடலாம்.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஏற்கனவே நான் ஒருமுறை குறிப்பிட்டபடி, அழகெனும் ஓவியம் இங்கே.. பாடலின் கடைசி பாராவான ‘ஆடை விலக்கும் பூங்காற்றை...’ (இது ரெக்கார்டில் கிடையாது) வரிகளில் தலைவர் நமக்கு எதிரே வருவது போலிருக்கும். ஆனால், திடீரென தலைவர் நாம் பார்க்கும் வியூவில் இருந்து முன்னே செல்லும்போதுதான் ஏற்கனவே காட்டப்பட்டது பிம்பம் என்று தெரிய வரும். கண்ணாடியில் கேமரா விழாதபடி எடுக்கப்பட்ட அற்புத கேமரா கோணத்தில் அட்டகாசமான ஒளிப்பதிவு.
கிளைமாக்சில் ஹெலிகாப்டருக்கு மேல் இன்னொரு ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கியிருப்பார்கள். ஹெலிகாப்டரும் கீழே கடலில் செல்லும் மோட்டார் படகும் அருமையான ஏரியல் வியூ படமாக்கம்.
திறமையான ஒளிப்பதிவாளரை தமிழ் திரையுலகம் இழந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் தேவி வார இதழில் திரு.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தனது தாயார் இறந்த செய்தியை தெரிவிக்காததற்காக தலைவர் தன்னை உரிமையோடு கோபித்துக் கொண்டதாக கூறியிருந்தார். அன்னாருக்கு அஞ்சலி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th December 2014 05:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks