-
24th December 2014, 11:56 AM
#11
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

தத்துவ நெறிதனை, தர்மத்தின் காப்பினை,
தாயின் உயர்வினை, ஆண்டவன் அருள்தனை,
அமைதியின் ஆக்கத்தை, கருணையின் ஒளிதனை,
கடமையின் வலிமையை, கொள்கையின் நோன்பினை,
ஆட்சியின் நெறிதனை, மக்களின் நலன்தனை,
தித்திக்கும் இசையோடு தெவிட்டாத தேன்பாக,
முத்தாக, மணியாக, தெள்ளமுது பாடல்களில்
வலியுறுத்தி/நிலைநிறுத்தி/அறிவுறுத்தி அருமருந்தாய்
மானிடர்நெஞ்சத்தில் எளிதாய்/இனிமையாய் விதைத்தவர்
நல்லோர்கள் இதயத்தில் நல்லகுருநாதனாக இசைந்தவர்
உலகில் பலமக்கள் உன்னையே அடிகோலி/மேற்க்காட்டி
உத்தமன் உன்உருவில் நற்பணிகள் நாளுமே புரிகின்றார்.
கொக்கரிக்கும் கொம்பர்களும், வக்கணை பேசுவோரும்,
நயவஞ்சகர்களும், கஞ்சர்களும் உன் வேல்போன்ற
விழிகண்டால் பதுங்கும்/புறம்ஒதுங்கும் பூனையடா.
சத்தியமும் தர்மமும் அற்புதமாய் சத்யதாய் தந்ததடா
வெற்றியின் மலர்கொண்டு புன்னகைப்பூக்கும்,
நான்மறை போற்றிடும் புரட்சித் தலைவர்.
-
24th December 2014 11:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks