-
16th January 2015, 03:29 PM
#11
Junior Member
Veteran Hubber
சின்னக்கண்ணன் கல்யாண பரிசு ஏற்கனவே நான் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.....வானத்தில் இறக்கை கட்டிப் பறந்த காதலர்களை கால் பதித்து
நடக்க வைத்த காதல்மன்னர் தொடரில்
page 40/398 of this thread :
"Down to the Earth King of Romance-GG".
புதிய தொடர்
வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்
பகுதி1 கல்யாணபரிசு : பாஸ்கர்-வசந்தி
அன்புக்கதவைத் திறந்திடும் மந்திரக் கோலான காதல் கோலோச்சாத தமிழ்த் திரைப்படம் உண்டோ?
அம்பிகாபதி அமராவதி, சலீம் ,அனார்கலி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், தேவதாஸ் பார்வதி..... புதினங்களிலும் நாடகமேடைகளிலும் உலவி ரசிகர்களின் மனக்கண்ணில் கண்ணுக்கெட்டாத உயரத்தில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த கற்பனைக் காதல் பறவைகளை நம் கண்முன்னே அடுத்தவீட்டுப் பையன் பெண் ரேஞ்சில் நம்பகத்தன்மையுடன் பூமியில் கால் பதித்து நடை பயின்றிட காதல் மன்னரின் இணைவில் ஒரு முன்னோடி முக்கோணக் காதல் கதையை உருவாக்கி மனதை நெகிழ வைக்கும் பாத்திரப் படைப்பில் சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி வாயிலாக உயிரோட்டம் தந்து தங்கவேலு சரோஜா இணைவில் கதையோடு இணைந்த நகைச்சுவையையும் பின்னி தமிழ்த் திரையுலகின் காதல் தாரக மந்திர வெள்ளி விழாப் படமாக்கி சாதனை செய்தார் ஸ்ரீதர்என்னும் புதுமை விரும்பி இயக்குனர் செம்மல்
இளமைத் துள்ளலுடன் அறிமுக நாயகி சரோஜாதேவியுடன் நிகழ்த்தும் இதமான இயல்பான காதல் சாகசங்கள் சூழல் காரணமாக விஜயகுமாரியை மணக்க வேண்டிய தருணம் தொட்டு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் காதலை மறக்க முடியாத வேதனைவலிகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம், இறுதியில் தனது குழந்தையையே சரோஜாதேவிக்கு கல்யாணபரிசாக வழங்கிவிட்டு குறிக்கோளற்ற பாதையில் விரக்தி மேலிட தள்ளாடி நடந்து செல்லும் இறுதிக்கட்டம் வரை ஜெமினியின் சாம்ராஜ்யமே! AMராஜாவின் இனிமையான இசையமைப்பில் காதுக்கினிய பாடல்களுடன் கண்ணுக்கினிய காதல் காட்சிகள் நிறைந்த இப்படம் தமிழ்த் திரையுலகில் விடிவெள்ளியே !
வாடிக்கை மறந்திடலாமோ..... பின் வாட்டிடும் கேள்விகளும் ஏனோ?
காதல் மன்னரை கண்டாலே துள்ளாத மனமும் துள்ளுமே!
தீபாவளிக்கான முத்திரைப் பாடல்
ஆசையினாலே மனம் தடுமாறும்போது....காதல் மன்னரின் இதமான பார்வை போதுமே
காதல் தோல்வி...கல்யாணம் கசப்பு மருந்தே!
காலத்தால் மறக்க முடியாத நகைச்சுவை அதிரடி முத்திரை !
காதல் தோல்வியுற்றாலும் விஜயகுமாரியிடமும் அன்பான கணவனாகவே பாசம் கொட்டி யதார்த்தத்தை உணர வைக்கும் ஜெமினி
The riveting climax of this movie...unforgettable!காலம் மாறினாலும் மாறாத காதல்மன்னரின் மனதை உலுக்கியெடுக்கும் நடிப்பின் சாட்சி!
GG returns with his trademark signature love scenes and performance in வஞ்சிக்கோட்டை வாலிபன் !
Last edited by sivajisenthil; 22nd January 2015 at 08:14 AM.
-
16th January 2015 03:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks