-
2nd February 2015, 06:44 AM
#1
Junior Member
Devoted Hubber
Makkal thilagam mgr part 14
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் திருவள்ளுவர். மனித நேய பண்பெல்லாம் மக்கள் திலகம் அருள் கொடையாகும். "மன்னாதி மன்னன் புகழ் எல்லாம், மெய்யோர், நல்லோர் நெஞ்சின் இறைவடிவாகும்" என விளம்பி மக்கள்திலகம் திரியில் பாகம் 14 துவங்க எனக்கு வாய்ப்பு அளித்த மக்கள்திலகம் திரியின் நண்பர்களுக்கும் மற்றும் மையம் அங்கத்தினர்களுக்கும் எனது நன்றிகள். மேலும், இத்திரியின் பதிவு பதினான்கு தொடங்க வாய்ப்பு வந்தது பெரும் மகிழ்ச்சி எனக்கு தந்தது. எனது ராசி எண் 14. எனக்கு வேலை கிடைத்து அலுவலகத்தில் சேர்ந்த நாள் 14.3.1979, என்னுடைய அலுவலக தொடக்க கூட்டு எண்ணிக்கை எண்ணும் 14 (2039), எனக்கு பதவி உயர்வு கிடைத்து, பதவி ஏற்று கொண்ட நாளும் 14.9.2013, என்னுடைய வீட்டு எண்ணும் 356/14 (356=14) இவ்வாறு 14வது திரியினை தொடங்க எனக்கு வந்த வாய்ப்பு மக்கள் திலகம் தந்த அருள்மாட்சி.

வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுபடை, திருபுகழ்,
கந்த புராணம், மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் போற்றி வழிபாடபட்டவனாம் பாட்டுடைத் தலைவன் என்றும் நிலைத்திருக்கும் தமிழ் கடவுள் முருக பெருமானின் மறு வடிவே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முருகு என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் எம்.ஜி.ஆர். என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் ஒன்றாக இருப்பதே இதற்க்கு சான்றாகும். (M)மு - முகுந்தன் (விஷ்ணு ), (R)ரு-ருத்ர, (சிவன் ) (G)கா-கமலன் (பிரம்மா ). தமிழ் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு தொன்றுதொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டு வரும் தெய்வம். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்களும் பல்வேறு நாம கரணங்களால் மக்களால் அழைக்கப்பட்டவர் என்றும். அவருடைய வாழ்க்கை பயணம் ஆராய்ச்சிக்குரியது. அறிஞர்களாலும், கவிஞர்களாலும், கலைஞர்களாலும், கலை விற்பன்னர்களாலும், நல்லோர்களாலும், ஏழை எளிய மக்களாலும், நடுத்தர மக்களாலும், உயர்தர இனத்தோராலும் புகழப்பட்ட, நேசிக்கப்பட்ட, வணக்கத்திர்க்குஉரியவன் புரட்சி தலைவன் எம்.ஜி.ஆர்.
Last edited by Tenali Rajan; 3rd February 2015 at 06:30 PM.
Reason: added
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd February 2015 06:44 AM
# ADS
Circuit advertisement
Bookmarks