Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.

    கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.

    கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.

    இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

    எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

    அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

    listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

    நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?

    அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)

    அந்த அதிசயத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes kalnayak, sivaa, Harrietlgy, ssp_s, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •