-
17th March 2015, 07:19 PM
#11
Junior Member
Platinum Hubber
நீதிக்கு தலை வணங்கு-18-3-2015
மக்கள் திலகத்தின் ''நீதிக்கு தலை வணங்கு '' - 40 வது ஆண்டு உதய தினம் .
1976ல் வெளிவந்த மாபெரும் வெற்றி படைப்பு .
தவறு செய்தவன் திருந்தியாகவேண்டும் என்ற உன்னத கருத்தினை மையமாக கொண்டு வந்த படம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு . இனிய பாடல்கள் நிறைந்த படம் .
அண்ணா சாலையில் இரண்டு அரங்கில் [ தேவிகலா - ஓடியன் ] வந்து தேவி கலாவில் 105 நாட்கள் [முதல் 100நாள்] படம் ஓடியது .
கனவுகளே ..ஆயிரம் கனவுகளே .. பாடலில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , விறுவிறுப்பான நடனமும்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தது .
நான் பார்த்தா ........ பாடலில் அன்றைய அரசியல் சூழ் நிலையில் அர்த்தமுள்ள பாடலாக வந்தது .
ஜேசுதாசின் மென்மை குரலில் இந்த பச்சை கிளிக்கு .. பாடல் அழகான தாலாட்டு பாடல் .
வரலக்ஷ்மியின் குரலில் மக்கள் திலகத்தின் எழிலான பிம்பத்தை போற்றி பாடும் பாடல் கண்ணுக்கு விருந்து .
எத்தனை மனிதர்கள் ...உலகத்திலே - ஜெயச்சந்திரனின் முதல் அர்த்தமுள்ள சமூக அவலநிலை பாடல் .
பார்க்க பார்க்க சிரிப்பு வருது - பாடலில் சர்க்காரியா ...ரிபோர்ட் நினைவுகள் வரும் ...
மக்கள் திலகம் - ராமதாஸ் சண்டை காட்சி - பைக் ரேஸ் காட்சிகள் - அருமை
1976ல் வந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் .
-
17th March 2015 07:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks