நன்றி Naaz / Neel D,
உங்கள் பின்னூட்டங்கள் மிகுந்த உற்சாகம் கொடுக்கிறது.
அடுத்து வரும் பாடல், மிகவும் பிரபலமான பாடல். இலங்கை வானொலியில் இந்த ஒலிக்காத நாளே இல்லை எனலாம். எனக்கு இப்போதும் மிகவும் விருப்பமான, எப்போது கேட்டாலும் திகட்டாத, கேட்கும் போதெல்லாம் எனக்குள் அடக்க முடியாத ஒருவிதமான புல்லரிப்பு ஏற்ப்படுத்தும் பாடல். அருமையான மெட்டமைப்பு, அம்சமான இசையமைப்பு, இவைகளுடன் ஒன்றர கலந்து பாடலுக்கு கூடுதல் ஜீவன் கொடுக்கும் குரல்கள்...நீங்களும் கண்டிப்பாக பலமுறை கேட்டு ரசித்திருக்கும் பாடல்தான். ஆனாலும், இந்த இழையில் இணைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
படம்: உயர்ந்தவர்கள்
பாடல்: இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/l3e1...van_Irandu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்




Reply With Quote
Bookmarks