அனேகன் ஒளிபரப்பு - ஆவேசப்பட்ட ரசிகர்களை சமாதானப்படுத்திய தனுஷ்

இந்தியில் எவ்வளவு பெரிய சூப்பர்ஹிட் படமானாலும் வெளியான ஒரே மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும். தமிழில் அப்படியில்லை. இரண்டு மூன்று வருடங்கள் ஊறப்போட்ட பின்புதான் தொலைக்காட்சிக்கு வரும்.

மாறாக, அனேகன் படம் வெளியாகி ஐம்பது நாள்களை கடந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி அதனை நாளை - தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்புகிறது. தோல்விப் படங்கள்தான் இப்படி உடனடியாக தொலைக்காட்சிக்கு வரும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆவேசமடைந்து இணையத்தில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த தனுஷ், அனேகன் ஒளிபரப்பு குறித்து எனது ரசிகர்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனத்துக்கும், தொலைக்காட்சிக்கும் என்ன ஒப்பந்தம் என்பது எனக்கு தெரியாது. அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அது தான் முக்கியம். அப்படம் ஒளிபரப்பப்பட்டால் இன்னும் அதிகமான பேர் அப்படத்தை ரசிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.