-
3rd May 2015, 11:21 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர் செந்தில்வேல்,
அள்ள அள்ளக் குறையாத அதே சமயம் சற்றும் அலுப்பூட்டாத அட்சய பாத்திரமாய் ஆவணங்களைத் தொகுத்தளிக்கும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக விமான நிலையத்தில் நடிகர் திலகத்தை வரவேற்க காத்திருந்த ரசிகர்களின் ஆர்வமிகுதியால் நடிகர் திலகத்தின் ஒப்பனையாளர் திரு ரங்கசாமி அவர்களின் கால் முறிவு அன்று பெரும்பாலான ரசிகர்களுக்கு சற்று மனவருத்தம் ஏற்படுத்தியது. தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், தான் முற்றிலும் குணமடையாத நிலையிலும் திரு ரங்கசாமி அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஒப்பனைப் பணியைத் தொடர்ந்தார்கள். இந்த செய்தியை உறுதிப்படுத்தும் சிவாஜி ரசிகன் பக்கத்தை இங்கு பார்த்ததும் தங்களுக்கு உடனே நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் என எண்ணினேன்.
தேவன் கோயில் மணிஓசை படத்திற்கு ஒப்பந்தம் ஆனவுடனே திரு விஜயரமணி அவர்களுக்கு தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தன. உயிர் படத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் தமிழகமெங்கும் அறியப்பட்ட விஜயரமணியின் இசையில் தேவன் கோயில் மணி ஓசை படத்திற்காக அருமையான பாடலும் பதிவானது. அது மட்டுமின்றி அவருடைய இசைக்குழு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து நடிகர் திலகத்தின் படப்பாடல்களை இசைத்தனர். அதற்கு முன்னோட்டமாக அமைந்தது 175வது படவிழா. இதையும் தங்கள் ஆவணம் எடுத்துரைக்கிறது.
தொடர்ந்து தாருங்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் அபூர்வ ஆவணங்களை..
http:// https://docs.google.com/file...p=docslist_api
-
3rd May 2015 11:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks