Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    எத்தனை கண்கள் என்மேலே
    ..ஏந்திழை எனக்கே தெரியவில்லை
    எத்தனாய்த் தென்றல் இங்குவந்தே
    ..என்னிடம் நடையைக் கேட்கிறதே
    பித்தனாய் மூன்றாம் பிறைகூட
    .. பாவையென் நகங்கள் கேட்கிறதே
    புத்தனு மில்லை நானிங்கே
    …பூவினில் நெஞ்சம் கொண்டவள்தான்..

    எனக்கும் சிலவாய் ஆசையுண்டு
    ..ஏக்கம் தீர்க்க யார்வருவார்
    கனவாய்ச் சிரிக்கும் மேகங்கள்
    ..கனமாய்க் கூந்தலில் நிறந்தருமா
    தினமும் தினமும் நானணிய
    ..சிரிக்கும் மழைத்துளி நகைதருமா
    குணமாய்க் குயிலும் குரலைத்தான்
    ..கேட்குது நானும் தரமாட்டேன்!
    *

    ஆஹா..ஆஹா என்ன ஒரு இனிய பாடல்..இனிய கவிதைவரிகள் வைரமுத்துவினுடையவை.. தென்றலைத் தேடினால் தேன்மழையாய்ப் பாடல் கிடைத்தது..

    சுவலட்சுமி, கெளதமி, ரவளி அண்ட் வைரமுத்துவின் கவின்மிகு வரிகள்..ஒரு கவிதை மற்றொரு கவிதையை எழுத வைப்பதே அதன் அழகு.. நண்பர்களே டோண்ட் மிஸ்..
    **

    தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தத்தோம்
    தாழம்பூவின் வாசம் கேட்டேன் தத்தோம் தத்தோம்
    மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
    முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்

    இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
    ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
    அழைக்காத போதும் நிலவு வந்தது
    தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

    பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
    எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
    இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
    எதை இரவல் வாங்க நின்றாய்

    ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
    தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
    வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
    வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
    காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்

    மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
    முத்து மாலையாக்கிக் கொண்டேன்
    வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
    எந்தன் சேலை ஆக வேண்டும்

    ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
    தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
    ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு

    குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
    உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்

    மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
    மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்

    மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
    மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்

    துணையாக தூங்க இரவும் வந்தது
    தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்


  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, uvausan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •