-
28th June 2015, 06:21 AM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து 16 படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ் திரு சின்னப்பா தேவரின் நூற்றாண்டை முன்னிட்டு தாங்கள் பதிவிட்ட படங்கள் பட்டியல் மற்றும் தகவல்கள் மிகவும் அருமை .
தேவர் அவர்கள் சிறந்த தயாரிப்பு நிர்வாகி . அவருடைய படங்கள் பூஜை தினத்தன்றே படம் வெளியாகும் தேதியினை அறிவிப்பார் .பூஜை தினத்தன்றே எம்ஜிஆர் படங்கள் எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும் .
தேவர் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மிருகங்களை வைத்து படம் எடுத்துள்ளார் . 1961ல் மக்கள் திலகத்தின் ''திருடாதே '' படம் சென்னை பிளாசா - பாரத் - மகாலட்சுமி அரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது .பின்னர்
தேவரின் தாய் சொல்லை தட்டாதே- 1961 , தாயை காத்த தனயன் -1962 படங்கள் இதே அரங்கில் வந்து 100 நாட்கள் மேல் ஓடி மாபெரும் வெற்றி அடைந்தது .வேட்டைக்காரன் -1964 பொங்கல் அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது .
சென்னை - சபையர் அரங்கில் முதல் முறையாக திரையிடப்பட்டதமிழ் படம் தேவரின் கன்னித்தாய் -1965. ஆறு வாரங்களுக்கு மட்டும் என்று விளம்பரம் தந்தார்கள் . முதல் வார பிரமாண்ட வசூலுடன் விளம்பரமும் தந்தார்கள் .
1962, 1963, 1964, 1966, 1968 முறையே ஆண்டுக்கு இரு படங்களை தயாரித்தார்கள் .தேவரின் முதல் வண்ணப்படம்
நல்ல நேரம் .சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்களும் , பிற ஊர்களில் 100 நாட்களும் , இலங்கையில் 100 நாட்களும் ஓடியது .
தேவரின் 16 எம்ஜிஆர் படங்களும் மறு வெளியீடுகளில் பல முறை தொடர்ந்து வெளிவந்து சாதனைகள் படைத்துள்ளது .
திரை இசைத்திலகம் இசையில் பாடகர் திலகம் பாடிய தத்துவ பாடல்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமைகள் சேர்த்தது .
மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்ட ....
போயும் போயும் மனிதனுக்கு ....
மாறாதையா மாறாது ....
தர்மம் தலைகாக்கும் ..தக்க சமயத்தில் ...
உன்னை அறிந்தால் ..நீ உன்னை ..
ஆண்டவன் உலகத்தில் முதலாளி ..
கேளம்மா சின்ன பொண்ணு கேளு ..
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு
உழைக்கும் கைகளே ...
நல்ல நல்ல நிலம் பார்த்து
கடவும் என்னும் முதலாளி ...
ஓடி ஓடி உழைக்கணும் ...
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பாற்றலையும் , தனி ஆளுமைகளையும் தன்னுடைய 16 படங்களிலும் வெளி வர மக்கள் திலகத்தை வைத்து தயாரித்த சின்னப்பா தேவரை மறக்க முடியாது .
Last edited by esvee; 28th June 2015 at 06:24 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th June 2015 06:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks