-
30th July 2015, 10:57 PM
#11
Senior Member
Seasoned Hubber
சிவாஜி செந்தில் சார்
நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்க்வே செய்யும்.
குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக Hawaiian Guitar இசைக் கருவியை பிரதானமாக வைத்து இப்பாடலை அமைத்திருப்பார். சில சமயம் இது மேண்டலினை நினைவூட்டும். ஆனால் மேண்டலினுக்கு சிறந்த உதாரணம் உத்தம புத்திரன் படத்தின் யாரடி நீ மோகினி பாடல்.
இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
30th July 2015 10:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks