Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லோருமே இறைவனால் இயக்கப்படுகிற நடிகர்களே ! நடிப்புக்குள் நடிப்பாக எத்தனை முக மூடிகளை நாம் போட வேண்டியிருக்கிறது !

    இயல்பாகவே இயல்பாகவே மாறுவேடம் தரிக்கும் ஆசை நமது மனதின் ஒரு மூலையில் படுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது! சந்தர்ப்பங்கள் சரிவர அமைவதில்லை ..அவ்வளவே! சந்தர்ப்பம் கிடைத்தால் யோக்கியனும் ஒரு நூலிழையில் அயோக்கியனாக மாறும் சாத்தியக்கூறுகள் அதிகமே!

    ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது அக்கதாபாத்திரமே ஒரு மாறு வேடமிட்டு பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற வேண்டிய சூழலில் திரைக்கதை வடிவமைக்கப் படும் போது திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே மாறுவேட குணாதிசயத்தையும் உயிர்ப்பித்து ரசிகர்களைக் கட்டிப் போட இயலும்!


    கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

    மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

    வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

    எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

    Last edited by sivajisenthil; 13th August 2015 at 09:27 PM.

  2. Thanks Russellzlc, Richardsof thanked for this post
    Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •