-
16th September 2015, 09:18 PM
#11
Senior Member
Senior Hubber
விடாரென எண்ணினால் விட்டுவிட்டார் செந்தில்
கிடாரை எழுதவில்லை கேள்..!
அதானே.. (இல்லை எழுதியாச்சா?!)
பாஸ்..இவர் வேற முருகன்ங்க..!
சுராலியா..
கொஞ்சம் தமிழ்ப் ‘படுத்தி”ப் பார்த்தேன்!
*
திருடினாய் கண்ணா என்னிதயத்தை இங்கே..
பார்வையை மட்டும் திருடாதே நீ…
வாழ்வில் எனக்கு மாற்றம் தந்தாயே
மாற்றிவிடாதே அதையேதான் நீ…
ஓஒ நீ தான் என் இதயந்தான்
எடுத்து எடுத்து எடுத்து…விளையாடாதே நீ..
திருடினாயே....
வசந்தமாய் மாறி நானும் உந்தன் உலகினில் வருவேனே
வஞ்சி எந்தன் வார்த்தை ஒன்றில் இந்நாளும் முடியாதே..
என்னுடையவன் நீ
என்னுடையவன் நீ
இன்று நான் சத்யம் சொல்லிச் செல்வேன் கண்ணா..
திருடினாயே..
அவன்:
ஓ..மாதவிக் கொடியின் உடலை நான் விதமாய் அழகுசெய்வேன்
ஹ்ருதய ரத்தம் உன்னிதழில் என்றும் இட்டபடி இருப்பேனே..
என்னுடையவள் நீ..
என்னுடையவள் நீ..
திருடினாய் கள்ளி எந்தன் இதயத்தை இங்கே
திருடினாயே..
(ஹி.ஹி..மெட்டுக்கு அர்த்தம் கெடாமல் பாட்டெழுதிப் பார்த்தேன்..!) ஒழுங்கா ஃபிட் ஆகுதா..வேற வார்த்தை வேணும்னா போட்டுக்கலாம்!)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th September 2015 09:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks