-
20th September 2015, 07:30 PM
#11
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
இன்று 20-09-1968 திரை உலக முடி சூடா மன்னனாக மக்கள்திலகம் திகழ்ந்த நேரத்தில் 100-வது திரை பட காவியமாக "ஒளிவிளக்கு"- வெளியான காலம் "பொற்காலம்"... ஆஹா!!! பட தலைப்பே என்ன ஒரு அற்புத அமைப்பு... எவ்வளவோ நடிகர்கள், நடிகைகள் படங்களில் அறிமுக காட்சி பல விதங்களில் வந்திருந்தாலும், ஒளிவிளக்கு - மக்கள்திலகம் அறிமுகம் ஆகும் காட்சியும், ஸ்டில்லும் (ஸ்டில்) இருக்கிறேதே, அடேயப்பா!!!!! என்ன ஒரு ஸ்டைல்... அட்டகாசம்...இது போல வேறு எவருக்கும் அருமையாக, அற்புதமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை...அந்த டைட்டில் காட்சிகள் முழுவதும் விதம், விதமான ஆடைகள் ஜெர்கின்ஸ் போன்றவை - காண நம் கண்கள் கோடி போதாது...அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்த காவியத்திற்கு ரசிகர்கள், பொதுமக்கள் - ஏகோபித்த பேராதரவு கிடைத்து கொண்டிருப்பதற்கு இந்த டைட்டில் காட்சியும் ஒரு முக்கிய காரணமாகும்...
-
20th September 2015 07:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks