-
22nd September 2015, 07:43 PM
#11
Junior Member
Diamond Hubber
படத்தின் பெயர் சொல்ல இன்று வரை நிலைத்து ரசிக்க வைக்கும் பாடல்.முதல் இரண்டுவரிகளைமீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்.பாலாவின் தேன் மதுரக்குரல் மற்ற மெலடிகளை விட இதில் குழைவு அதிகம்.
பொதுவாக சந்தோசம்சொன்னால்தான் சுகம்.ஆனால் இதில் சோகம் சொல்வதும் இதம் என்பதை பாலு பாடும்போது மயங்க வைக்கிறது.
இளையராஜா +பாலு*பிரபு கூட்டணியில் மற்றும் ஒரு சூப்பர்ஹிட் பாடல்.இன்றைய இரவு நேர தாலாட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.
நிலவொன்றுகண்டேன் என் ஜன்னலில்
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
Nilavondru கண்டேன் - எஸ்.பி.பி. - ஜானகி -. Kairaa:
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
22nd September 2015 07:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks