-
14th January 2016, 12:27 AM
#11
Junior Member
Senior Hubber
'இரு மலர்கள்' ஏராளமானோருக்கும், எனக்கும்
பிடித்த இனிப்பு மிட்டாய்.
எத்தனை முறையானாலும்
தெவிட்டாத அதன் சுவை,
அந்தச் சுவையால் நான் அடைந்த திருப்தி, நிம்மதி,
இத்தனை சுவையானது
என் நாவில் இருக்கிற பெருமிதம் எல்லாவற்றையும்
எழுதித் தீர்த்தேன்.
முழுசாய் முடித்த பிறகு ஒரு
பயம் என்னைக் கவ்விக் கொண்டது.
"இரு மலர்கள்" என்கிற இந்த
இனிப்புக்கு என்னைப் போல்
எத்தனை விரும்பிகள்?
இனிப்பை வியந்த என் எழுத்து
அத்தனை விரும்பிகளுக்கும்
ஏற்புடையதாயிருக்குமா?
ஏற்கனவே இதே இனிப்பை
ஆழ்ந்து, அனுபவித்து ருசித்த
அவர்களுக்கெல்லாம் எனது
சப்புக் கொட்டல் எரிச்சலைத்
தந்திருக்குமோ?
நிறைய பயங்கள்.
முதன் முதலாய் இந்த பயம்
உடைத்து வாழ்த்திய வாசு சாருக்கு நன்றி சொல்லிப் பேசிய போது கூட, இந்த பயம்
குறித்துச் சொன்னேன்.
மிக நீண்ட இடைவெளிக்குப்
பிறகு திரிக்கு வந்த மாத்திரத்தில், கொஞ்ச நஞ்ச
பயத்தையும் காணாமலடித்து,
என்னை உளமார
வாழ்த்தி மிகவும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.
----------------
சற்று முன்தான் "எதிரொலி"
பார்த்து முடித்தேன்... முரசு
தொலைக்காட்சியில்.
மிகுந்த வேதனையோடு நம்
நடிகர் திலகம் பேசுவதாய்
இதில் ஒரு வசனம் வைத்திருக்கிறார்... இயக்குனர் சிகரம் அமரர் கே.பி.
" இந்த உலகம் பொல்லாததுன்னு எனக்குத்
தெரியும்.ஆனா இவ்வளவு பொல்லாததுன்னு தெரியாது."
"தாவணிக் கனவுகள்" கேப்டன்
பாத்திரத்தைக் கொண்டாடத்
தெரியாத இந்த உலகம் கூட பொல்லாததுதான்.
---------------
மிகச் சரியான புரிதலோடு,
மிகச் சரியான வார்த்தைகளால்
பாராட்டப்படுகிற போது
கிடைக்கிற சந்தோஷம்,
அடுத்ததை எழுதக் கிளம்பும்
பேனாவில் மையாய் நிரம்புகிறது.
--------------------
மிக்க நன்றி...முரளி சார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
14th January 2016 12:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks