Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கப்பதக்கம்.
    இந்தப்படம் திரையிடும்போதெல்லாம் மனம் சந்தோசத்தில்அலை மோதும். பட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட செய்தி வந்ததும் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஊர் முழுவதும் அலைந்து எல்லா போஸ்டர்களையும் பார்த்த பின்புதான் மனம் முழு திருப்தி அடையும்.sp சௌத்ரியின் கெட்டப் நம்மை அன்றெல்லாம் ஆகாயத்தில் மிதக்கச் செய்யும்.படம் ஓடி வேறுபடம் திரையிடும்வரை அந்த நினைவுகளே சுழன்று கொண்டு இருக்கும்.
    போஸ்டர் டிசைன்களில் நடிகர்திலகத்தின் அசத்தலான போஸ்கள் ஊரையே அட்டகாசப்படுத்தும்.
    குறிப்பாக சில போஸ்கள்.
    1.புல் சூட் ஓவர்கோட்டில் குடை பிடித்துக்கொண்டு நிற்கும் ஸ்டைல்.
    2.ஹெல்மெட்டை இடுப்பில் வைத்துக் கொண்டு போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாக நிற்கும் போஸ்.
    3.ஸ்ரீகாந்தை அரெஸ்ட் செய்யும் போது பேசும் வசன காட்சி.
    4.போலீஸ் யூனிபார்மில் கையை பின்கட்டி நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் போஸ்.
    5.அந்தக்காலங்களில் நம்மை மிரள வைத்த ஸ்டைலான துப்பாக்கியில் புல்லட் சொருகும் ஸ்டைல்.இந்த போஸ்டர் rare.சிவாஜி ரசிகர்களின் ரத்தத்தை சூடேற்றும் ஸ்டைல் இது.
    6.மஞ்சள் கலர் காஸ்டயூமில் ட்விங்கிள் ட்விங்கிள்லிட்டில் ஸ்டார் பாடல் காட்சி.என்ன அழகான முக வெட்டு.
    7.ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் கம்பீரமான ஸ்டைல்.
    8.சுமைதாங்கி பாடலில் கே ஆர் விஜயாவை சக்கரவண்டியில் தள்ளி வரும் காட்சி.
    9.சோதனை மேலே சோதனை யில் கையை முறுக்கும் காட்சி.
    10."jegan i warn you"
    இந்த வசனம் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளிப்படுத்தும் கம்பீரம் இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது.
    தமிழகத்தையே மிரட்டிய ஸ்டைல் இது.
    சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.நம் ரசிப்பும் குறையப் போவதில்லை. வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
    சின்ன வயசு சௌத்ரீ யாக வரும்
    நடிகர்திலகத்தின் நடிப்பில் தான் எத்தனை துடிப்பு.அரைக்கால் டிராயர் சர்ட்டில் விரைப்பான தோற்றத்தில் பிரமாதமாயிருக்குமே.அதே தோற்றத்தில் முழுப்படம் ஒன்று உருவாக்க ஏன் இயக்குனர்களுக்கு தோன்றவில்லை என்பது பெரும்பான்மை ரசிகர்களின் ஆதங்கங்களில் ஒன்று.அந்த தோற்றங்களில் பட போஸ்டர் களும் புகைப்படங்களும் கூட குறைவாகத்தான் வெளியாகின.

    மேற்கூறிய அனுபவங்களை பெரும்பான்மையான ரசிகர்கள் அனுபவித்திருப்பர்.அந்தக்காலங்கள்தான் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்.பட போஸ்டர்களை பார்க்க வைத்தே ரசிப்பில் தன்னிறைவை தந்த ஒரே நடிகன்எங்கள்
    " ந டி க ர் தி ல க ம்"

    காவல் துறைக்கு பெருமை சேர்த்த
    அந்த மாமனிதனின்கம்பீர காவியமான
    " தங்கப்பதக்கம் "
    12.02.2016 முதல் கோவை ராயலில் திரையிடப்பட்டுள்ளது.

    நன்றி
    செந்தில்வேல்
    கோவை










  2. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •