-
30th July 2016, 04:42 PM
#9
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ரிக்ஷாக்காரன் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட தரைப்படமாக 1971 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த வகையில், இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் பாரத் பட்டத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில், ரிக்ஷாக்காரன் திரைப்படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ரிக்ஷாக்காரன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை குவாலிட்டி சினிமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் பிலிம் விஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் வெளியிடுகின்றனர்
ரிக்ஷாக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவாக்கப்பட்ட நிலையில், எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடவுள்ள நிலையில், அந்த விழாவின் முதற்கட்டமாக ரிக்ஷாக்காரன் படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ரிக்ஷாக்காரன் திரைப்படம், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks