-
26th November 2016, 08:30 PM
#11
Junior Member
Senior Hubber

மக்கள் திலகம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல. சினிமாத்துறையில் அவருக்கு தெரியாதது எதுவும் கிடையாது. படத் தயாரிப்பு, இயக்கம், எடிட்டிங், கேமரா கோணங்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இசை ஞானம், வசனங்களின் முக்கியத்துவம், எந்த வசனங்களை, பாடல்களை எந்தக் காட்சியில் பயன்படுத்துவது என்ற நுண்ணறிவு, நடனத் திறமை, குதிரையேற்றம், சண்டைக் கலைகள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு காட்சி சிறப்பாக அமைய கேமரா கோணங்கள் மிகவும் முக்கியம். அதைவிடவும் முக்கியமானது, அந்த கேமரா கோணத்துக்கு ஏற்றபடி அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகர் குறிப்பிட்ட இடத்தில் நிற்பது. அவ்வாறு குறிப்பிட்ட இடத்தில் நின்றால்தான் காட்சிக்கு மேலும் அழகு கூடும். கேமரா கோணத்துக்கு ஏற்றபடி மிகச் சரியான இடத்தில் நின்று போஸ் கொடுப்பதில் மக்கள் திலகத்துக்கு இணை யாருமில்லை.
நான் ஆணையிட்டால் படத்தில் இடம்பெற்ற, பிறந்த இடம் தேடி … பாடலில் வரும் ஒரு காட்சியின் ஸ்டில்லை இத்துடன் இணைத்துள்ளேன். மக்கள் திலகத்தை வரவேற்க அமைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்கு தனது தலைக்குப் பின்னணியில் வட்டமாக அழகாக தோன்றுமளவுக்கு மிகச்சரியான இடத்தில் நின்று மக்கள் திலகம் போஸ் கொடுக்கும் அழகைப் பாருங்கள். அவரது களங்கமில்லா எழில் முகம் மேலும் அழகு.
தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஆண்டவனுக்குத்தான் இருக்கும் என்பார்கள். கடவுள் படங்களின் ஓவியங்களில் இதைக் காணலாம். மக்கள் திலகமும் ஆண்டவர்தான், புகழ்ச்சிக்காக சொல்லவில்லை சத்தியத்தைக் கூறுகிறேன். ஒருமுறை அல்ல, எந்த தலைவரும் இதுவரை செய்யாத சாதனையாக தமிழ்நாட்டை புரட்சித் தலைவர் தொடர்ச்சியாக மூன்று முறை ஆண்டவர்தான்!
இப்போது சொல்லுங்கள் நம் தலைவர் ஆண்டவர்தானே!
-
26th November 2016 08:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks