-
30th December 2016, 01:40 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
அன்பார்ந்த நண்பர்களே,
வர்தா புயலின் சீற்றத்தின் காரணமாக, இணைய தள இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நமது திரியில் பதிவுகள் மேற்கொள்ள
இயலவில்லை. இடைவிடாத தொடர்பின் பலனாக , இன்று மாலைதான் இன்டர்நெட் சேவை இணைப்பு கிடைத்தது .
மீண்டும் திரியில் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகள் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தாமதமாக பதிவுகள் இடுவதில்
மிகுந்த வருத்தம். நண்பர்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு,
எங்கே உங்களை ரொம்ப நாளாக வரவில்லை என்று நினைத்தேன். புரட்சித் தலைவர் நினைவு நாளுக்குக் கூட திரிக்கு வந்து அஞ்சலி பதிவு போடவில்லையே என்று நினைத்தேன். இன்றுதான் வராததற்கு காரணத்தை தெரிந்து கொண்டேன். நன்றி.
வராத நாளுக்கும் சேர்த்து வைத்து சும்மா குமுறிவிட்டீர்கள் குமுறி. எத்தனை பதிவுகள் தங்களின் உழைப்புக்கும் புரட்சித் தலைவர் மேலே உள்ள பக்திக்கும் நன்றி.
ஒரு திரியில் புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு நடிகருக்கு அடுத்த நிலையில் இருந்தார் என்று கூசாமல் பொய் புளுகுகிறார்கள். சிரிக்க வாய் மட்டும் போறாது. ஒரு பொய்யை திரும்பியும் திரும்பியும் சொன்னால் அதுவே உண்மையாகி விடும் என்று நினைத்து புளுகுகிறார்கள். யார் முதல் நிலையில் இருந்தார்கள், யார் மக்களால் ஒதுக்கப்பட்டு இப்போது மறக்கப்பட்டார்கள் என்பது எல்லாம் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
புரட்சித் தலைவர் எங்கும் எதிலும் முதல் நிலையில் இருந்தார் என்பதற்கு உதாரணமாய் நீங்கள் வராத பதினைந்து நாட்களில் (எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. ஒன்றிரண்டு நாட்கள் கூட குறைச்சு இருக்கலாம்) எவ்வளவு செய்திகள் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வந்திருக்கின்றன என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தெரிய முடிகிறது. இதிலேருந்தே புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் புரியும். வேறு எந்த நடிகரைப் பற்றி 15 நாட்களில் இவ்வளவு செய்திகள் அதுவும் மறைந்த பிறகு வரும்?
உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். தவறாக நினைக்காதீர்கள். மன்னியுங்கள். புரட்சித் தலைவரோடு நமக்கு பிடிக்காத நடிகர் உடன் இருப்பது போல படங்கள் இருந்தால் அதை வெட்டி அல்லது மறைத்து பதிவிடவும். நம் திரியில் நமக்கு பிடிக்காத நடிகரின் படங்கள் வேண்டாம். அவர்களுக்கே அவ்வளவு இருக்கும்போது நமக்கு எவ்வளவு இருக்கும். மன்னிக்கவும். நன்றி.
-
30th December 2016 01:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks