-
9th May 2017, 02:43 AM
#11
Junior Member
Senior Hubber

மக்கள் திலகத்துக்கு முதலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சாயா என்ற படத்தில் வந்தது. அதில் கதாநாயகி டி.வி.குமுதினி. அப்ப அவர் பெரிய நடிகையாக இருந்தார். மேலே உள்ள இந்த செய்தியில் மக்கள் திலகத்துடன் டி.வி.குமுதினி இருக்கும் படம்தான் சாயா. மக்கள் திலகத்தைப் பார்த்து குமுதினியின் மற்றும் அவரது கணவரின் (அப்போதே குமுதினிக்கு திருமணமாகி அவரது கணவரும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வருவார்) கிண்டல், ஏளனம், அவமானங்கள் போன்ற பல காரணங்களால் சாயா படமும் பாதியில நின்றுபோய்விட்டது. பின்னர், ராஜகுமாரி படத்தில்தான் கதாநாயகனாக மக்கள் திலகம் நடித்தார்.
ஒரு காலத்தில் தன்னை கிண்டல் செய்து படமும் நின்றுபோக ஒரு காரணமாக இருந்த நடிகையை மக்கள் திலகம் பின்னாளில் பழிவாங்கவில்லை. அந்த நடிகையை தான் நடிக்கும் படத்தில் இருந்தே தூக்கிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி மூலம் தெரிந்த பிற்பாடு, மீண்டும் அவரை மக்கள் திலகம் அழைத்து தனது தாய் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பத்தாயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
மக்கள் திலகத்துக்கு டி.வி.குமுதினி தாயாக நடித்தது எந்தப் படம் என்று யாரும் குழம்ப வேண்டாம். டி.ஆர். ராமண்ணாவும் என்.எஸ்.கிருஷ்ணன் தம்பி என்.எஸ்.திரவியமும் தயாரித்த அந்தப் படத்தை ராமண்ணாவே டைரக்ட் செய்தார். சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்தப் படம், அப்போது புரட்சித் தலைவர் அரசியல் சூழலில் தீவிரமாகி பின்னர், தேர்தலில் வென்று முதல்வராகி விட்டதால் நின்றுபோய்விட்டது.
அந்தப் படம் புரட்சிப் பித்தன். கீழே அந்தப் படத்தின் விளம்பரம்..

தனக்கு கெட்டது செய்தவருக்கும் நல்லது செய்யும் பொன்மனம் யாருக்கு வரும்?
அதனால்தான் மக்கள் திலகம்.. பொன்மனச் செம்மல்!
நன்றி - தேவசேனாபதி முகநூல் பக்கம்
-
9th May 2017 02:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks