-
23rd April 2011, 08:00 AM
#11
Senior Member
Diamond Hubber
தங்கை மீதான பாடல்கள் தமிழிசைப் பாடல்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவை. இதில் பாலு பாடிய "மணமாலையும் மஞ்சளும்.." பாடல் நினைவில் என்றும் நிற்கக் கூடியது. வரிகளின் வழியே பாசம், சகோதரத்துவம், மகிழ்ச்சி என பல்வகை உணர்வுகளை மிகவும் ஆத்மார்த்தமாக பாடியிருப்பார். வரிகள் பாடலை உயர்த்திப் பிடிக்கும் வகையில் அழகாக நெய்யப்பட்டிருக்கும். ( உதா: ஏதோதோ காட்சி ஒன்று கண்ணுக்குள் ஆடுதம்மா! ஆனந்த மின்னல் ஒன்று நெஞ்சுக்குள் ஓடுதம்மா!)
இரண்டாவது சரணத்தில் ஒரு நொடி (இல்லை.. மைக்ரோ நொடி எனச் சொல்லவேண்டும்) மெய்சிலிர்க்க வைத்திருப்பார் பாலு.
ஓராண்டு போனப்பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளில் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று
"தாய் மாமன் தோளில் நின்று" என வார்த்தைகளுக்கு முன்பு ஒரு சின்னக் குழந்தைச் சிரிப்பு சிரித்து தொடருவார். அப்படியே நம் தோள்களில் குழந்தை இருப்பது போலவே ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டுச் செல்லும் அந்தக் குரல்.
(பாடல் இடம்பெற்ற
இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் பாடலுக்கான சாரம்சத்தை சிதைக்க வில்லை!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd April 2011 08:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks