-
11th May 2011, 11:37 PM
#11
பாக்கியவதி மற்றும் கர்ணன் படத்தின் டிவிடி செய்திகள் பற்றிய எனது பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு அட்டைப் படங்களுக்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் ஒன்று சொல்ல வேண்டும். நடிகர் திலகம் படங்களின் டிவிடி விற்பனையை பார்த்து விட்டு டிவிடி தயாரிப்பில் ஈடு்பட்டிருக்கும் பல நிறுவனங்களும் நடிகர் திலகத்தின் பல படங்களையும் டிவிடிகளாக வெளியிட்டு லாபம் அடைகின்றனர். அதாவது நடிகர் திலகத்தின் ஒரே படத்திற்கு இரண்டு மூன்று நிறுவனங்கள் டிவிடி வெளியிட்டிருக்கின்றன. உதாரணமாக திருவிளையாடல்,தில்லானா, புதிய பறவை, தெய்வ மகன், தங்கப்பதக்கம், பாசமலர், ஆண்டவன் கட்டளை, இரு மலர்கள், ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அநேகமாக நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களும் குறைந்தது இரண்டு நிறுவனங்களின் டிவிடியில் கிடைக்கிறது. வேறு எவருக்கும் இப்படி இருப்பது போல் தெரியவில்லை.
டிவிடி பற்றி எழுதும்போது மேலும் ஒரு செய்தி, நேற்று எழுத விட்டுப் போனது. டிவிடி விற்பனையில் மேலும் ஒரு சாதனை படைக்கும் படமாக கடையில் விற்பனையாளர் குறிப்பிட்டது வியட்நாம் வீடு படத்தைப் பற்றி, குறிப்பாக Moser Baer வெளியிட்ட ஒரு மூன்று பட தொகுப்பு. அதில் இடம் பெற்ற படங்கள் வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம். இந்த டிவிடி விற்பனையை இதுவரை வேறு எந்த டிவிடியும் விஞ்சியதில்லை என சொன்னார்.
அன்புடன்
ராகவேந்தர் சார்/சாரதி,
இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.
-
11th May 2011 11:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks