Results 1 to 10 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

Threaded View

  1. #10
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் பார்த்த சாரதி,

    'நலந்தானா' பாடலை மிக நேர்த்தியாக எழுத்து வடிவில் அளித்துள்ளீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இப்பாடலைப்பற்றி புகழ்ந்துரைக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் சொல்லும் இடம் அவர் கைகளால் நலம் விசாரிக்க. இவர் கண்களால் நலமெ என்றுரைக்கும் காட்சி. அப்போது நாட்டியப்பேரொளியின் முகத்தில் தோன்றும் பரிதவிப்பும் அதற்கு பதிலாக இவர் முகத்தில் இழைய விடும் புன்னகையும் என்ன ஒரு அழகு. அதை மேலும் அழகுற பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள்.

    டியர் முரளி,

    'பட்டத்து ராணி' பாடல் காட்சி பற்றிய திறனாய்வு மிகத்துல்லியமாக காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நீங்கள் சொன்னது போல கண்ணாடி மீது காஞ்சனா வந்து விழ, நடிகர்திலகம் நடந்து வந்து கண்ணாடி மீது ஷூ பதித்து நிற்க, அக்காட்சியை கண்ணாடியின் மறுபக்கமிருந்து படமாக்கிய விதம் அன்றைக்கு புதிய யுக்தி. அந்த அரேபிய உடையில் அவர் நடிகர்திலகம் என்று நம்பவே முடியாது. அந்த அளவுக்கு நேர்த்தியான மேக்கப் மற்றும் அடர்த்தியான புருவம், ஒவ்வொரு முறை சாட்டையால் அடித்த பின்னும் துப்பாக்கியோடு நம்பியாரின் பக்கம் திரும்பிப்பார்க்கும் அந்த தீர்க்கமான பார்வை.

    (இந்தப்பாடலில் தேவையில்லாத ஒரு காட்சி, ஒரு கட்டத்தில் மேடை செட்களின் நடுவே நாகேஷ் பதுங்கிப் பதுங்கி நடந்து வருவது. அது பாடலின் டெம்போவைச்சற்று குறைப்பது போலத்தோன்றும்).

    இந்தக்காட்சியில் நம்பியாரின் முகபாவங்களும் அட்டகாசம். முதலில் அசால்ட்டாக இருக்கும் அவர், பாடல் முடிவை நெருங்க நெருங்க, முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பதட்டத்தைக்கொண்டு வருவதும், அதன் காரணமாக முகம் முழுவதும் வேர்த்துக் கொட்டுவதுமாக சிறப்பாக செய்திருப்பார்.

    இன்றைக்கும் ஏதாவதொரு தொலைக்காட்சியில் தினமும் இப்பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பு.

    டியர் ராகவேந்தர்,

    பாடல்களின் திறனாய்வுகளைப்பார்த்ததும் உடனே அவற்றைக் காட்சி (வீடியோ) வடிவில் தந்து, பதிவைப் படித்தோரை 'ரெடி ரெபரென்ஸ்' செய்ய வைத்து மெருகூட்டி விட்டீர்கள். நிச்சயமாக இது அரிய சேவை, இது தொய்வின்றி தொடரட்டும்.

    டியர் Nov,

    சீனியர் டாக்டரும், ஜூனியர் டாக்டரும் இணைந்திருக்கும் வண்ணப்புகைப்படம் அருமை. இந்த அபூர்வ காட்சியை பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.

    என்னுடைய 'மெழுகுவர்த்தி' பாடலின் ஆய்வைப்படித்து, பாராட்டுக்கள் தந்த அனைவரும் என் நன்றி. அன்று நடிகர்திலகம் அவ்வளவு சிறப்பாகச் செய்து வைத்திருக்கப்போய்தான், இன்று நாம் இவ்வளவு விவரமாகப் பேச முடிகிறது.
    Last edited by saradhaa_sn; 23rd May 2011 at 11:51 AM.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •