-
25th July 2011, 08:32 PM
#11
Senior Member
Diamond Hubber
ஆரண்யக் காண்டம் - கடைசி இருபது நிமிடக் காட்சிகளை பார்க்கவில்லை. பார்த்தவரைக்கும் மிகவும் அருமை. தியாகராஜன் குமாரராஜாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு, வசனம், இயக்கம் இந்த மூன்றிலும் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார் தி.குமாரராஜா
நடிப்பு என வரும்போது கூத்துப் பட்டறை குரு சோமசுந்தரன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குரலில் ஏற்றம், இறக்கம் வைத்து நிஜ மனிதன் போலவே படம் முழுவதும் உலா வந்திருக்கிறார்.
அடுத்து சம்பத் ராஜ்.
படைப்பிற்கான பெயர் சூடலே தனித்துவம். ஆரண்யம் - வனம். காடுகளில் பல தரப்பட்ட மிருகங்கள். Survival of the fittest. அதை மிக அழகாக வடித்திருக்கிறார்கள். வினோத்தின் ஒளி ஓவியம் உலகத் தரம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th July 2011 08:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks