I wanted to share the below story here – may be irrelevant, but makes a very interesting read. Those who didnt know earlier try to find out the author. For the sake of comfort and the growth of the threadI have taken the liberty to make it into four parts. Try to complete it in a single read and if anybody is disappointed – paNam vaapas.
கடும்நகை - I
சாப்பிடுவதைக் குத்திக் காண்பித்தாலே குமரேசனுக்கு கோபம் வரும்.
"வடிச்சதெல்லாம் தா இதே முளுங்கிருச்சு" என்று அக்காள் விளையாட்டாக ஒரு முறை சொல்லப்போக, இரண்டு நாள் சாப்பிடாமலே இருந்துவிட்டான் குழந்தை.
முதல் நாள் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. இரண்டாம் நாள் வீடு இறுக்கமானது. அம்மா மிரட்டினாள், கெஞ்சினாள்; அப்பா முதுகில் ரெண்டு போட்டார் ஒன்றும் மாறவில்லை. அக்காவை கன்னத்தில் விட்டார், அவள் அழுதுகொண்டே வந்து மன்னிப்பு கேட்ட பிறகு தான் சாப்பிட்டான். எல்லோரும் இலேசானார்கள், அப்பாவைத்தவிற . "இவ்வள வீம்பு நல்லதுக்கில்லடீய்" என்று கோபமும், பயமும் கலந்த தொனியில் அம்மாவிடம் சொன்னார். பிறகொருமுறை சத்துணவு வேளையில் வாத்தியார் ஏதோ சொல்லப்போக கடுங்கோபத்தில் புதிதாக கற்றுக்கொண்டிருந்த ஒரு வட்டாரச்சொல்லை உதிர்த்தான். சக மாணவர்களின் குபீர்ச்சிரிப்பில் ஆசிரியர் சற்று திடுக்கிட, புளிய மிளார் அகப்படுவதற்குள் சுள்ளான் ஓட்டம் பிடித்துவிட்டான்.
அதெல்லாம் ஒரு காலத்தில். சேந்தம்பட்டி முத்தைய்யன் செட்டுக்கு வாழ்க்கைப்படுவதற்கு முன். இப்போது எல்லோருக்கும் முன்னால் அந்த ராமசாமி இவன் சாப்பிடுவதைப் பற்றி தரம்தாழ்ந்து பேசினாலும் சோற்றோடு அவமானத்தையும் சேர்த்து சாப்பிடவேண்டியிருக்கிறது. (Contd... in Part II)
Bookmarks