வெங்கி, கமலை விட்டுட்டு பார்த்தால் கூட, பலதரப்பட்ட படங்கள் பெருவெற்றி பெற்றிருக்கிறது. எது கமர்ஷியல்/வெகுஜன ரசனை என்பதற்கு அதுவே நல்ல உதாரணமாக இருக்கும்.

எனக்குத்தெரிந்து, ஹேராம், கொஞ்சம் சீரியசான படம் என்பதை புரிந்துகொண்டேன், கமல் முதன்முதலில் இயக்கி இருக்கிரார், அந்த எதிர்பார்ப்பும் கூட. எனவே, மற்ற படங்களை பற்றி நினைக்காமல், ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்நோக்கி படத்தை பார்த்தேன். மகாநதி அளாவிற்கு சோக சம்பவங்கள் உள்ள படமாக இருக்கவில்லை, அதே சமயம் அதை விட சற்றெ சிக்கலாக இருந்தாற்போலவும் இருந்தது. இரண்டாம் முறை பார்க்கும்போது இன்னும் நஙு புரிந்தது.

படத்தில் எனக்குமிகப்பிடித்த பாட்சிகள், நான் மேலே சொன்ன இரண்டு தான். அவையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. அதிலும் அந்த துப்பாக்கியை தொலைத்துவிட்டு, அதன்பின் வரும் காட்சிகாள் ரொம்பவே விறுவிறுப்பாக எனக்கு இருந்தது. விறுவிறுப்பு என்றால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஒரு துப்பாக்கி எவ்வளவு பெரிய கலவரத்தை உண்டுபண்னக்கூடிய சூழல் அன்று நிலவியது என்பதும் எந்த கமர்ஷியல் படத்திற்கும் குறைவில்லாத காட்சிகளாகத்தான் எனக்குப்பட்டது