-
18th July 2012, 12:19 AM
#11
கர்ணன் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தும் முயற்சிக்கு பூஜை ஒரு அமாவாசையன்று போடப்பட்டது. படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டதும் ஒரு அமாவாசையன்றுதான். கர்ணன் 125-வது நாளை கொண்டாடும் இன்றைய தினமும் [ஜூலை 18] அமாவாசைதான். அதுவும் ஆடி அமாவாசை. அனைத்து மாதங்களிலும் அமாவாசை வருமென்றாலும் ஆடி மற்றும் தை அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. பெரும்பாலானோர் தங்கள் குல மூதாதையர்களை வணங்கி பூஜை செய்யும் நாள் இது. இந்த நாளில் தமிழ் திரையுலகின் முதல்வனான நடிகர் திலகத்தை போற்றுவோம். இதையும் தாண்டிய வெற்றியை கர்ணனும் தொடர்ந்து வரும் காலங்களில் வெளியாகும் நடிகர் திலகத்தின் படங்களும் பெற வேண்டும் என்ற வரம் வேண்டுவோம்.
அன்புடன்
-
18th July 2012 12:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks