-
29th July 2012, 08:15 AM
#10
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்
அடடா! என்ன ஒரு டைமிங் பதிவு சார்! ஆச்சர்யம், வியப்பு, திகைப்பு, சந்தோஷம், திருப்தி என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேர வரவழைத்து வைத்து விட்டீர்கள்.
இன்ன நேரத்தில் இதைத் தர வேண்டும் என்பதில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மிக மிக அழகான, நேர்த்தியான பதிவு. தலைவரின் நெஞ்சக்குமுறல் பொங்கி வரும் வெள்ளப் பிரவாகமாய் பேட்டி முழுதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. நம் நாட்டுக்கான அங்கீகாரம் எங்கும் இல்லை, எதிலும் இல்லை என்ற அவருடைய ஆதங்கம் நியாயமானதே! காரணம் பாழாய்ப் போன அரசியல். பல திறமைசாலிகள் அடையாளம் காணப்படாததற்கு இந்த அரசியல் தான் காரணம். உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர் திலகத்திற்கு நம் நாட்டில் கிடைத்த அங்கீகாரம் தான் தெரியுமே!
"என்னென்னமோ நடக்குது... ஒரு வார்த்தை இதுவரைக்கும் நான் வாய் திறந்து சொன்னது கிடையாது...
எப்ப நீ இல்லன்னு ஆயிட்டியோ அப்ப நீ எந்த விஷயத்திலும் தலையிடக் கூடாதுங்குறது எனக்கு நல்லாத் தெரியும்...
இது தெரியலன்னா இருந்து என்ன புண்ணியம்...
நீ இல்லேன்னு சொன்னா தலையிடாதேன்னுதானே அர்த்தம்"...
ஆஹா! நடிகர் திலகம் என்ற அந்த தீர்க்கதரிசியின் வரிகள் இன்றைய சூழ்நிலைகளில்கூட எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றன! நமக்காகவே நடிகர் திலகம் அப்போதே சொல்லிவிட்டாரோ! பலதடவை பலரும் நெருப்பிலே இட்டு பொசுக்கி சாம்பலாக்கினாலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்து வந்து நமெக்கெல்லாம் உவகை தந்தாரே நமது இதய தெய்வம்... அவருக்கிருந்த அதே தன்மான உணர்வு அவர் பக்தர்களான நமக்கு இயற்கையாக அமைந்ததில் ஆச்சரியமென்ன!
விளையாட்டுகளில் நடிகர் திலகத்திற்கு எப்போதுமே மிகுந்த interest உண்டு. அப்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கச் செல்லும் போது படம் துவங்குமுன் காட்டப்படும் செய்திப்பிரிவு படங்களில் (இந்தியன் நியூஸ் ரிவ்யூ) பல கிரிக்கெட் போட்டிகளை அவர் வெளிநாடுகளில் கண்டு களித்ததை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். தலைவருடன் அவருடைய உடன் பிறவா சகோதரி 'இசைக்குயில்' லதா மங்கேஷ்கர் அவர்களும் போட்டிகளை கண்டு ரசிப்பார். ('சிவந்த மண்' காவியத்தில் காளையை அடக்கும் காட்சிகளை படு உற்சாகமாய் கண்டு ரசிப்பாரே அது போல). ம்... அதெல்லாம் ஒரு பொற்காலம்.
ச(சா)ரி! எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டேன்...
தலைவரின் ஐந்து பக்க நேர்க்காணலை ஒரேநேரத்தில் பதிவிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்த திரியின் பசும்பொன்னே! எங்கள் பத்தரை மாற்றுத் தங்கமே! ஈடு இணை உண்டோ உங்களின் அரிய சேவைக்கு! நன்றிகள்! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!. தொடரட்டும் தங்களுடைய சர்ப்ரைஸ் அசத்தல்கள்.
Last edited by vasudevan31355; 29th July 2012 at 08:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks