-
25th November 2012, 12:48 AM
#11
வசந்த மாளிகை வெளியீட்டு தேதி பற்றிய செய்தியை பதிவிடலாம் என நினைத்து வந்தால் நண்பர் வாசு அதற்கு முன்னரே பதிவிட்ட காட்சியை காண்கிறேன். விநியோகஸ்தர் தரப்போடு பேசிய போது ரிலீஸ் தேதி டிசம்பர் 7 என்று சொன்னார்கள். நாளை தினத்தந்தியில் விளம்பரம் வருகிறது. ஆனால் அதில் ரிலீஸ் தேதி இருக்காது. வரும் 30-ந் தேதி வெள்ளியன்று வரும் விளம்பரத்தில் ரிலீஸ் தேதி இடம் பெறும்.
சென்னையை பொறுத்தவரை சாந்தி, அபிராமி, மகாராணி, பாரத் போன்ற திரையரங்குகளில் படம் வெளியாகலாம். சத்யம் வளாகத்தைப் பொறுத்தவரை இதுவரை முடிவாகவில்லை. கூடுதலாக சில அரங்குகளும் இடம் பெறலாம் வரும் வாரத்தில் அது இறுதி செய்யப்படும் என தெரிகிறது. சிட்டி NSC-யை பொறுத்தவரை 20 முதல் 25 அரங்குகளில் வெளியாகலாம்.
போஸ்டர் டிசைன்கள் அருமையாக அமைந்துள்ளன என கேள்விப்பட்டேன். அது முற்றிலும் உண்மை என்பது நண்பர் வாசு upload செய்திருக்கின்ற விளம்பர டிசைன்களை பார்க்கும் போதே தெரிகிறது. தமிழகமெங்கும் டிசம்பர் 7 அன்று கோலாகலமாக வெளியாகும் காட்சியை காண தயாராகுவோம்.
இனியும் கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் இங்கே பதிவிடுகிறேன்
அன்புடன்
-
25th November 2012 12:48 AM
# ADS
Circuit advertisement
Bookmarks