-
18th January 2013, 12:20 AM
#2931
Senior Member
Seasoned Hubber
முக்கியமான பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற மிகவும் வயதான பழைய காலத்து ரசிகர்கள், நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தினையும் நம் மய்யத்தின் பதிவுகளையும் அன்றாடம் பார்ப்பதாகவும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் இன்னும் பல்வேறு மன்றப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஆற்றி வருவது மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாய் உள்ளதாகவும் இவற்றையெல்லாம் பார்ப்பதன் மூலம் தங்களுடைய கவலைகளை மறக்க முடிகின்றதெனவும் தயவு செய்து எங்களுடைய வயதினைக் கருதியும் விருப்பத்தை முன்னிட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை அல்லது நிழற்படங்களைத் தரவேற்றும் படியும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வயதான காலத்தில் அவர்களுடைய அதுவும் பராசக்தி காலந்தொட்டே ரசிகர்களாய் இருப்பவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் நாம் நடிகர் திலகத்திற்கு தொண்டாற்றும் பேறு உள்ளதாலும் இவையெல்லாம் இங்கே இடம் பெற்றுள்ளன. இன்னும் தொடரும்.
அன்புடன்
-
18th January 2013 12:20 AM
# ADS
Circuit advertisement
-
18th January 2013, 07:56 AM
#2932
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
what about 10%?
எனக்கு மிக பிடித்த நடிகர்திலக ஜோடிகள்(வரிசை படி)-
வாணிஸ்ரீ, வைஜயந்தி மாலா, பத்மினி, தேவிகா,பாரதி, காஞ்சனா, சரோஜா தேவி,சாவித்திரி(1960 வரை), உஷா நந்தினி, சாரதா, விஜய நிர்மலா, விஜயஸ்ரீ, ஆலம் ,பத்மப்ரியா,
அம்பிகா,ஸ்ரீவித்யா,லட்சுமி.மணிமாலா,கிரிஜா. பண்டரிபாய்,மாலினி(sabash meena),ஹெலன்,ஜெயகுமாரி,ஜமுனா, வெண்ணிற ஆடை நிர்மலா,லதா .
எனக்கு சுத்தமாக பிடிக்காத ஜோடிகள்-
கே.ஆர்.விஜயா, எஸ்.வரலக்ஷ்மி,விஜயகுமாரி,பானுமதி, எம்.என்.ராஜம்,ஜி.வரலக்ஷ்மி,ஸ்ரீரஞ்சனி,C .I .D .சகுந்தலா, விஜயலலிதா,ராஜ சுலோச்சனா..
மற்றவை எல்லாமே - பொறுத்து கொள்ளலாம் type -நோ love no hate .
Last edited by Gopal.s; 18th January 2013 at 08:18 AM.
-
18th January 2013, 10:55 AM
#2933
Senior Member
Devoted Hubber
-
18th January 2013, 10:57 AM
#2934
Senior Member
Devoted Hubber
-
18th January 2013, 11:03 AM
#2935
Senior Member
Devoted Hubber
-
18th January 2013, 11:04 AM
#2936
Senior Member
Devoted Hubber
super scene from Deiva Magan
-
18th January 2013, 11:34 AM
#2937
Junior Member
Seasoned Hubber
Mr Balakrishnan,
Thanks for uploading the superb scene from Deiva Magan. Only NT
can do this again.
-
18th January 2013, 12:09 PM
#2938
Junior Member
Newbie Hubber
bala,
Welcome after a long gap. Happy with your return with bang.
-
18th January 2013, 02:06 PM
#2939
Senior Member
Devoted Hubber
யார் நடிகன் ?
அண்மை காலமாக திரை உலகில் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு நிகழ்வு.அதாவது ஒரு பெரிய இயக்குனரும்,பெரிய நடிகரும் இணைந்து ஒரு படம் பண்ண ஒப்புகொண்டு பின்னர் அதை கைவிடுவது! காரணம் கேட்டால், அந்த பெரிய நடிகர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிடுவார்.அது என்னவெனில்" இந்த கதை எனக்கு பொருந்தாது" "என்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்" என்று கூறுவார். இதை பற்றிய ஒரு சிறு அலசல் இந்த பதிவு.
யார் கதாநாயகன்!
எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் கதையின் கருவை உள் வாங்கி கொண்டு,கதைக்கு பொருந்தி, அதற்கேற்றாற்போல் தம்மை மெருகேற்றி நடிக்க கூடியவர்தான் கதையின் நாயகன் ! ஆனால் இன்று கதா நாயகன் வெறும் நாயகனாக மட்டுமே நமக்கு தோற்றமளிக்கிறார். அன்றைய காலத்தில் நடிகர் திலகம் திரு .சிவாஜி அவர்கள் கதைக்காக மட்டுமே நடித்தார். அவர் அவ்வாறு நடிக்கவில்லை எனில் ஒரு வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது !
ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ,பொது மக்களின் எதிர்பார்ப்பும் !
என்னதான் மக்களுக்காக நடித்தாலும் ரசிகர்கள்தான் தியேட்டருக்கு முதல் நாளில் வந்து எங்களை வாழ்த்துகிறார்கள் ! படம் வெளியிடும் முதல் நாள் வேலையை விட்டு விட்டு விடிய விடிய உழைக்கிறார்கள் அதனால் அவர்களின் ரசனைக்குத்தான் படம் எடுக்க முடியும் என்று கூறலாம் ! ஒரு ரசிகன் எதனால் ஒரு நடிகருக்கு ரசிகராகிறான் ! அந்த நடிகரானவர் ஏதோ ஒரு வகையில் அந்த ரசிகனை ஈர்க்கிறார்! உடனே அந்த நடிகர் மீது பற்று உண்டாகிறது.அவ்வளவுதான் அடுத்து வரும் படங்களில் அந்த நடிகர் நடித்தாலும் சரி! இல்லை என்றாலும் சரி! ஆனால் ஒரு சாதாரண , நடுநிலையான ஒருவர் படத்தில் நடிகரின் நடிப்பையோ , அவர் செய்யும் சாகச காட்சிகளையோ மட்டும் விரும்புவதில்லை மாறாக படத்தின் அத்தனை அம்சங்களையும் விரும்புவார் ! பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரை செய்வார்! இவ்வாறு பரிந்துரை செய்த படங்கள் தான் நூறு நாட்களுக்கு ஓடுகிறது!
கதைக்காக நடித்ததால்தான் சிவாஜிக்கு இன்றளவும் நமது தாத்தா ,பாட்டி கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். மக்கள் அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் சூட்டினரே அன்றி யாரும் ரசிகர் திலகம் என்று பட்டம் கொடுக்கவில்லை! ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் நடிப்பேன் என்று சொன்னால் அந்த நடிகரை மக்கள் மறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !
நன்றியுடன்!
இரா.மாடசாமி
http://vaanavilmadasamy.blogspot.com...g-post_13.html
Karuppasamy Duraichamy Nadar wrote :
Above 13 years ,one day the main and special scenes were in all the channel on INDEPENDENCE day .All that was occupied by the great Sivaji .My daughter asked and expressed her wonder on his actions .Your post is very nice
by DK., (D.Karuppasamy
Read more: http://vaanavilmadasamy.blogspot.com...#ixzz2IJYnJ4Sr
Last edited by abkhlabhi; 18th January 2013 at 02:09 PM.
-
18th January 2013, 05:06 PM
#2940
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
எனக்கு மிக பிடித்த நடிகர்திலக ஜோடிகள்(வரிசை படி)-
வாணிஸ்ரீ, வைஜயந்தி மாலா, பத்மினி, தேவிகா,பாரதி, காஞ்சனா, சரோஜா தேவி,சாவித்திரி(1960 வரை), உஷா நந்தினி, சாரதா, விஜய நிர்மலா, விஜயஸ்ரீ, ஆலம் ,பத்மப்ரியா,
அம்பிகா,ஸ்ரீவித்யா,லட்சுமி.மணிமாலா,கிரிஜா. பண்டரிபாய்,மாலினி(sabash meena),ஹெலன்,ஜெயகுமாரி,ஜமுனா, வெண்ணிற ஆடை நிர்மலா,லதா .
எனக்கு சுத்தமாக பிடிக்காத ஜோடிகள்-
கே.ஆர்.விஜயா, எஸ்.வரலக்ஷ்மி,விஜயகுமாரி,பானுமதி, எம்.என்.ராஜம்,ஜி.வரலக்ஷ்மி,ஸ்ரீரஞ்சனி,C .I .D .சகுந்தலா, விஜயலலிதா,ராஜ சுலோச்சனா..
மற்றவை எல்லாமே - பொறுத்து கொள்ளலாம் type -நோ love no hate .
ஆலம், ஹெலன் போன்றோர் NT உடன் dance தானே ஆடினார்கள்? the rest of them, I agree with you. But I like slim KRV in some roles where she plays just a subordinate house wife! Not too bad in 'Thanga pathakkam' though.
Bookmarks