இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு மொழியிலும் , இல்லாத சிறப்பு நமது திலகங்களின்
படங்கள் , பாடல்கள் ,தனிப்பட்ட அவர்களது சிறப்புக்கள் ,பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் - ஆய்வுகள் -நிழற் படங்கள் -வீடியோ -அன்றாட செய்திகள் - என்று அவர்கள் நினைவாகவே வாழ்ந்துவரும் பக்தர்கள் நாம் என்று சொல்வதில் உள்ள பெருமை -திருப்தி -......புண்ணியம் செய்தவர்கள் நாம் .

நீங்கள் குறிப்பிட்டதுபோல் 1960-1977 கால கட்டங்களில்
நவீன தொழில் நுட்பம் இல்லாத நேரத்தில் கடித போக்குவரத்து மட்டுமே ரசிகர்களை இனைய வைத்தது .

இன்று கடந்த காலத்தையே நேரில் காணும் அளவிற்கு
தொழில் நுட்பம் உண்டாக்கிய தாக்கம் மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவரின் சாதனைகள் மீண்டும் மையம்
இணய தளத்தில் மூலம் புகழ் பரப்பிடும் சாதனமாக
மாறி வருவது ரசிகர்களாகிய நமக்கு இந்த திரி ஒரு வரபிரசாதம்தான் .

நீங்கள் மற்றும் பம்மலார் - நெய்வேலி வாசு சார்
மூவரும் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளையும்
சுமார் 10 திரிகளில் பதிவிட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .
அதே போல் கடந்த 2012 முதல் நானும் மற்ற நண்பர்களும் மக்கள் திலகம் திரியில் பாகம் 2-3-4 என்று பயணம் செய்கின்றோம் .

திரியில் ஒரு கட்டுரை பதிவு செய்யவோ - நிழற்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதோ - எந்த அளவு கால விரயம் - தேடுதல் - உழைப்பு -அளவிட முடியாத பணியாகும் .

நமது சேவையின் அருமையினை பலரும் உணர்ந்துள்ளனர் .

மையம் திரியில் தினமும் பதிவிடுவது - பார்வையிடுவது

மூலம் கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தி வேறு எதற்கும் ஈடாகாது .

இந்த அரிய வாய்ப்பு தந்த மையம் நிறுவனத்திற்கும் நன்றி .

நடிகர் திலகம் திரியின் மூலம் ஏற்பட்ட நட்பு வட்டத்துக்கும் ,மக்கள் திலகம் திரி மூலம் மேலும் பல நண்பர்கள் இணைந்து இன்று பாகம் 4 வெற்றி நடை போடுவதற்கும் மூல காரணமான மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவருக்கும் நன்றி கூறி நாம் தொடர்ந்து பயணம் செய்வோம் .