Page 16 of 67 FirstFirst ... 614151617182666 ... LastLast
Results 151 to 160 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #151
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Ashok Kumar.jpg

    A still from the movie "Ashok Kumar"

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  4. #153
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Pradeep Balu View Post
    http://www.hindu.com/cp/2008/01/25/stories/2008012550401600.htm


    http://en.wikipedia.org/wiki/Ashok_Kumar_(film)


    [url]http://www.indian-heritage.org/flmmusic/songs_mkt/saraasarangal_mkt.html[/url


    http://www.songswale.com/14-bhoomiyi...-1941-mp3.html



    http://www.saigan.com/heritage/flmmu...umar_1941.html
    Mr.Pradeep - thanks for uploading the links for ashokkumar movie and also rare still from the the same movie.

  5. #154
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அசோக் குமார் படத்தின் பாடல்கள் மற்றும் பதிவுகள் வழங்கிய திரு பிரதீப் அவர்களுக்கு நன்றி

  6. #155
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like


    அற்புதமான பதிவு பிரதீப் சார்

  7. #156
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இந்த ஸ்டில் குமாரி படத்தினுடையது. அவர் எழுத நினைத்தது அநாயாசமான தோற்றம் என எண்ணுகிறேன்.
    mikavum sariyaana vaarthai Raghavendra Sir avarkale. Enakku udanadiyaaga gnabakaththirkku intha vaarthai thonravillai. thavarenpathu mattum therinthathu.

  8. #157
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 9வது திரைப்படமாகிய "தமிழ் அறியும் பெருமாள்" பற்றிய ஒரு தொகுப்பு :

    படம் வெளியான தேதி : 30-04-1942

    தயாரிப்பு : உமா பிக்சர்ஸ்

    மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : ராஜா குமாரன்


    நாயக - நாயகியர் : வி. ஏ. செல்லப்பா - எம். ஆர் சந்தனலக்ஷ்மி

    இதர நடிக நடிகையர் : டி.எஸ். துரைராஜ் - சி. டி ராஜகாந்தம்

    கதை வசனம் : இளங்கோவன்

    இயக்குனர் : டி. ஆர். ரகுநாத்

    படத்தில் இடம் பெற்ற மொத்த பாடல்கள் : 22

    இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.
    :

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜீ. ஆர்.
    எங்கள் இறைவன்

  9. #158
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் நடித்த 9வது திரைப்படமாகிய "தமிழ் அறியும் பெருமாள்" படத்தின் கதைச்சுருக்கம்
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    பாடலிபுத்திரத்திற்கு அரசனான பத்ரகிரியின் குமாரன் சந்தனன் கல்வியறிவில்லாதவனாக இருக்கவே, தந்தையால் அவன் நாட்டை விட்டு துரத்தப்படுகிறான். துரத்தப்பட்ட ராஜகுமாரனோ பல கஷ்டங்களை அனுபவித்து முடிவில் அழகாபுரியை அடைந்து அவ்வூர் வீதிகளை சுற்றி வருகையில், உப்பரிகையில் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ராஜ குமாரி ஏலங்குழலியை அவன் கண்டு தயங்க, அவளும் அவனைகண்டு மயங்குகிறாள் ராஜகுமாரி உடனே தன்னை அன்றிரவு அவ்வூர் சாவடியில் வந்திருந்து சந்திக்குமாறு ஓலை ஒன்றை எழுதி அவனிடம் வீச, ராஜகுமாரன் அதை எடுத்துக்கொண்டு நகர்கிறான். பின்னர் ராஜகுமாரன் ஒரு குஷ்டரோகியிடம் அந்த ஓலையை காட்டி அதில் எழுதியிருப்பதை படித்துக் காட்டுமாறு
    கேட்க, அவனோ வஞ்சகத்துடன் "ராஜன் மகள் அவனைக் கொன்று போட கருதியிருப்பதாக" எழுதி உள்ளாள் என்று கூறவே ராஜகுமாரனாகிய சந்தன குமாரன் பயந்து ஓடி விடுகிறான். பிறகு ராஜகுமாரி குறித்த நேரத்தில், அந்த குஷ்ட ரோகி ராஜகுமாரனைப் போல் நடிக்க, அவனைச் சந்திக்க வந்த ஏலங்குழலி உண்மை தெரிந்து உயிரை விடுகிறாள். இந்த விபரத்தை எப்படியோ யூகித்துணர்ந்த ராஜகுமாரன் அதே சாவடிக்கு வந்து தானும் ஜீவனை விடுகிறான். அகாலம்ருத்யுவின் காரணமான இருவரும் ஆவேசமாகின்றனர்.

    சில தினங்களுக்கு பிறகு ஔவையார் அந்த சாவடியில் தங்க அந்த இரு ஆவேசங்களும் அவரை மிரட்ட, ஔவையார் அவற்றிற்கு உண்மையைக் கூறி, மறு பிறவியில் தம்பதிகள் ஆகும் பாக்கியம் கிட்டும் என்று கூறி செல்கிறார்.

    ஆக, ஏலங்குழலி சோழநாட்டரசன் கரிகாலனின் அபிமான தாசியாகிய மரகத வடிவின் மகளாக பிறக்கிறாள். செண்பக வடிவு என்ற பெயரும் அவளுக்கு இடப்படுகிறது. சந்தன குமாரனோ மரகத வடிவின் தோட்டக்காரன் முருகன் தம்பி மகனாகப் பிறக்கிறான். இவனுக்கு முனியன் என்ற பெயரிடப்படுகிறது.

    செண்பகவடிவும், முனியனும் இணைபிரியா நண்பர்களாயிருப்பதைக் கண்ட மரகதவடிவு, கோபங்கொண்டு தோட்டக்கார முருகனை குடும்பத்துடன் துரத்தி விடுகிறான். ஆகவே, முனியன் செண்பகவடிவு தொடர்பு இத்துடன் முற்றுப்புள்ளியடைகிறது.

    செண்பகவடிவோ கல்வியில் மகாபாண்டித்திய முடையவளாகிறாள். ஒரு தினம் சோழ சமஸ்தானத்தில்
    செண்பகவடிவின் வித்வத்திறமை சோதிக்கப்பட்டு அந்த சோதனையில் வெற்றி பெருவதுடனன்றி, அரசனால் தமிழறியும் பெருமாள் என்ற பட்டத்தை பெறுகிறாள். மேலும், தன்னை வாதத்தில் ஜெயிக்கிறவன் எவனோ அவனே தனக்கு கணவனாவான்
    எனவும், வாதத்தில் தோற்பவர்களை தன் இஷ்டப்படி தண்டிக்க தனக்கு உரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசனிடம் கோருகிறாள். அரசனும் இதற்கு சம்மதித்து செண்பகவடிவுக்கு இதற்கென பிரத்தியோக அரண்மனை ஒன்றை கட்டித்தருகிறான்.

    பல வித்வான்களும், ராஜகுமாரர்களும், செண்பகவடிவிடம் வாதத்தில் தோற்று அவமானம் அடைகிறார்கள்

    வாலிப வயதை அடைந்த முனியனோ விறகு வெட்டி ஜீவனம் செய்கிறான்

    ஒரு தினம் வித்வச்செருக்கு கொண்ட தமிழறியும் பெருமாள் (செண்பகவடிவு) தன் தோழியர்களுடன் கோயிலுக்கு போக, வழியில் விறகு வெட்ட வந்த முனியனை கண்டு வெறுத்து, அவனைக் காரி உமிழ்கிறாள். முனியனோ ஆத்திரங்கொண்டு அவளை எப்படியாவது கல்யாணம் செய்வதாக சபதம் செய்கிறான். அவளால் அவமானப் பட்டவர்களும், அவளைக்கண்டு பொறாமை பட்டவர்களும் ஒன்று சேர்ந்து ஆயிரம் பொன்னை முனியனுக்கு கொடுத்து, அவனை தமிழறிவாளிடம் அனுப்புகின்றனர். கல்வியறிவு இல்லாத முனியனும் அவளால் அவமானப் படுத்தப்பட்டு துரத்தப் படுகிறான். அது முதல் முனியன் கல்வி கற்க முயற்சிக்கிறான் ஆனால், பூர்வ ஜென்ம வினையால் அந்த முயற்சியில் தோல்வி அடைகிறான். அதன் மீது ஒரு புலவரின் ஆலோசனைப்படி தன் காரியத்தை சாதிக்க வேண்டி, சங்கப் புலவர்களின் தலைவரான நக்கீர தேவரை சந்தித்து தனது ஆவலைப் பூர்த்தி செய்யுமாறு அவரிடம் கெஞ்ச, அவரும் முனியனுடன் புறப்பட்டு உறையூரில் உள்ள தமிழறிவாள் அரண்மனையை அடைகின்றனர். முனியனை வாயிலில் நிற்க வைத்து விட்டு நக்கீரர் விறகு தலையன் வேடத்தில் உள்ளே சென்று தமிழறியும் பெருமாளை வாதத்தில் வெல்கிறார் இவ்விதம் தோல்வியுற்ற தமிழறிவாள் மானம் தாங்காது கண்ணாடியால் தன்னைக் குத்திக் கொண்டு பிராணனை மாய்த்துக் கொள்கிறாள்.

    விசித்திரமான முடிவினை வெள்ளித்திரையில் காணலாம்.
    சுபம்.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜீ. ஆர்.
    எங்கள் இறைவன்

  10. #159
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    "தமிழ் அறியும் பெருமாள்" படத்தில் இடம் பெற்ற மொத்த 22 பாடல்கள் விவரம் : ஆரம்ப ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)

    1. இறை வணக்கம் பாடல் : ஆண்டவன் திருவருளாலே - யல்லோ ஆவதெல்லாம் பூமி மேலே

    2. தாலாட்டு பாடல் : ஆராரோ - ஆரிராரோ - சீராரும் மாதவ ச்ருங்கார மேனி

    3. ஜோடிப்பாடல் : கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு மிகும் அன்பு கொண்டென்னோடு

    4. தனித்த ஆண் பாடல் : வேதனை ஏன் விடுவாய் மனமே (பல்லவி)
    ஒதுபல்கோடு உயிர் வாழ் உலகில் (அனு பல்லவி)
    படர்ந்த வாசியும் அடர்ந்த கான் மரம் (சரணம்)

    5. தனித்த பெண் பாடல் : கமலாதனி - கலாதருணி (பல்லவி)
    அமுதேகனி - அருள் வாகினி (அனு பல்லவி)
    ஆகம புராணி - ஆதாரமே நீ (சரணம்)

    6. தனித்த பெண் பாடல் : தாசி மகள் தாசியல்லவோ (பல்லவி)
    காசினி மீதினில் மீன் குஞ்சுக்கு நீச்சு (அனு பல்லவி)
    ததந்தவர்கெல்லாம் நாம் தாரம் (சரணம்)

    7. தனித்த ஆண் பாடல் : இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - வாலி
    சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

    8. தனித்த பெண் பாடல் : பூமியில் புகழோ புண்ணியமோ
    புருஷனைக் கொண்டுழல் பூவையர்க்கே

    9. தனித்த ஆண் பாடல் : சிங்காரி ஒய்யாரி - தலை சீவி சினுக்கெடுத்து

    10. ஜோடிப்பாடல் : கிழவியான பிறகு உனக்கும் பழைய நினைப்பு மாறலே

    11. தனித்த ஆண் பாடல் : எங்கே மனம் வீசுது - வேறெங்கே (பல்லவி)
    அங்கே இங்கே என்றலைந்தோடி (அனு பல்லவி)

    12. இரு ஆண் பாடல் : அட முனியா அல்லாரே - நீ கும்பிட்டுக்கடா
    போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா

    13. பெண்கள் கூட்டம் பால் குடம் பாடல் : பாலாழி ஏலேலோ ஆலமரம் - ஐலசா - பாம்பு மேலே ஐலசா

    14. தனித்த ஆண் பாடல் : கல்வியைப் போலொரு செல்வம் உளதோ (பல்லவி)
    வெள்ளத்தாலும் கனல் விழினும் குலையா (அனு பல்லவி)
    கலைஞனமே இல்லார் கானில் வாழ் மரம்

    15. தனித்த ஆண் பாடல் : சடாதாரா ஜீவா தார - தமியேன் யெனையாளாய் சிவா குருபரா

    16. தனித்த ஆண் பாடல் : சேதி கேளுமையா - சாமியே சேதி கேளுமையா
    காதைக்கொடுத்து நாஞ் சொல்றதை யோகி

    17. கார்த்திகை தீப பாடல் : எங்கும் நிறைந்த ஜோதிதன் - இயல்பெரு உலகம்

    18. தனித்த ஆண் பாடல் : ஈச்சுத்தேரேரி நடுக்காட்டில் வேடுவச்சி - பச்சைக் கொடியாட

    19. தனித்த பெண் பாடல் : தனையறிந்ததின் தன்மையறியாமல் (பல்லவி)
    பொன்னை நிகர்த்தவள் பூங்குயில்போலே (அனு பல்லவி)
    முத்தணி யும்மலர் கொத்தும் களபமும் (சரணம்)

    20. தனித்த ஆண் பாடல் : இன்பம் தருவது - நீ உணர்வாய் (பல்லவி)
    கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்
    காதல் இருவரின் கருத்தொன்றாகும் (சரணம்)


    21. ஜோடிப்பாடல் : அவ பொஞ்சாதி நாம் புருசெ ஆவோம்
    ஆயி புள்ளேளகுட்டி பெத்துக்கிட்டு வாழ்வோம்

    22 . தனித்த ஆண் பாடல் : (விருத்தம்) பொன்மகளைப் பொருது நின்றால்
    (பாடல்) - அருளே புரி கலைவாணி - அந்த ரக்ஷ்சகி வீனகானி


    ================================================== ================================================== =========


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜீ. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #160
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    http://www.thehindu.com/arts/cinema/article1998955.ece



    Thamizh Ariyum Perumal 1942

Page 16 of 67 FirstFirst ... 614151617182666 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •